விஷாலை பிடுங்கி தின்ற வெட்கம்.. அன்று கை நடுங்கி, வாய் குழறி, மயங்கி விழுந்து.. இப்ப டோட்டல் சேஞ்ச்
சென்னை: விஷாலுக்கு என்ன ஆச்சு என்று பதறி கேட்கும் அளவுக்கு அவரது உடல்நிலை கிலியையும், கவலையையும் தந்திருந்தன.. இதற்கு 2 நிகழ்ச்சிகளில் நடந்த சம்பவங்களே உதாரணமாக விளங்கின. தற்போது விஷாலுக்கு திருமணம் முடிவாகியிருக்கிறது.. இது சம்பந்தமான அறிவிப்பை விஷாலே வெளியிட்டு, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அந்த வீடியோவில் ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் விஷாலை காண முடிகிறது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, மதகதராஜா விழாவில் விஷால் பங்கேற்றிருந்தார்.. அப்போது விஷால் நடுக்கத்துடன் பேசினார்.. மைக்கைகூட பிடிக்க முடியாமல் தடுமாறினார்.. வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.. சரியாக பேசக்கூட முடியாமல் நாக்கு குழறியது.. இதெல்லாம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டுபண்ணியிருந்தது.. விஷாலுக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பினார்கள்.

சத்யம் தியேட்டர்
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே மதகஜராஜா பிரிமியர் ஷோவுக்காக, சத்யம் தியேட்டருக்கு விஷால் வந்திருந்தார். கருப்பு கலர் காரில், கெத்தாக வந்திறங்கினார்.. டீ-ஷர்ட், தொப்பியுடன் கேஷூவலாக வந்த விஷால் அங்கிருந்தவர்களை பார்த்து கைகுலுக்கினார்.. நடிகர்கள், ஷாம், நடிகை குஷ்பு என திரைபிரபலங்கள் அனைவரும் விஷாலை கட்டிப்பிடித்து வரவேற்றிருந்தனர்..
அப்படியானால், மதகதராஜாவில் விஷால் ஏன் அப்படி நடந்து கொண்டார்? உண்மையிலேயே விஷாலுக்கு உடம்பு சரியில்லையா? பட புரமோஷனுக்காக அப்படி செய்தாரா? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
கூவாகம் விழா
அதேபோல, கடந்த வாரம் நடந்த மிஸ் திருநங்கை அழகு போட்டியில் விஷால் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசி முடித்ததுமே, கிளம்பி செல்ல தயாரானார். அப்போது திடீரென மேடையிலேயே விஷால் மயங்கி கீழே சரிந்து விழுந்தார்..
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மயங்கிய நிலையில், டாக்டர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு மேடையிலேயே முதலுதவி சிகிச்சை அவருக்கு தரப்பட்டது. பிறகு மயக்கம் தெளிந்து எழுப்பி, தண்ணீர் குடிக்க கொடுத்து, காரில் ஏற செய்து, விழுப்புரத்தில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துக் சென்றனர். அவருடன் அமைச்சர் பொன்முடியும் காரில் மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. அதற்கு பிறகு அவரது உடல்நலம் குறித்த தகவல் எதுவுமே வெளியாகவில்லை.
வெட்கப்பட்ட விஷால்
இந்நிலையில், நேற்றைய தினம் விழாவில் விஷால் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார்.. கிளீன் ஷேவ் செய்யப்பட்டு, ஒவ்வொரு வார்த்தையையும் தெள்ளத் தெளிவாக பேசினார்.. அதுமட்டுமல்ல, காதல் விஷயத்தை இயக்குனர் மேடையில் போட்டு உடைத்ததுமே, விஷால் வெட்கப்பட்டார்.. கை நடுக்கம், வாய் குழறி பேசுவது, மயக்கம் போட்டு விழுவது என எந்த அறிகுறியுமே அவரிடம் தென்படவில்லை. விஷால் ஆரோக்கியமாக மகிழ்ச்சியை தருகிறது என்றாலும் அவரது உடல்நலம் குறித்த உண்மைத்தன்மை இதுவரை தெரியவில்லை.
புரியாத புதிர் விஷால்
கடந்த வாரம் மூத்த பத்திரிகையாளர் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "தனக்கு படங்கள் கைவசம் இல்லை என்பதால், இபபடியெல்லாம் விஷால் செய்வதாக சொல்கிறார்கள்.. அதை ஏற்க முடியாது. மதகதராஜா விழாவுக்கு வரும்போது வைரல் ஜூரம் கை நடுக்கம் வந்தது.. 4 நாளில் சரியாகிவிட்டது என்றார்..
பிறகு கூவத்தூர் விழாவுக்கு நார்மலாகவே வந்த விஷால், திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.. அப்படியானால், உண்மையிலேயே விஷாலுக்கு உடம்பு சரியில்லையா? அல்லது அதுபோல நடிக்கிறாரா? அல்லது உடல்நலம் நன்றாக இருப்பது போல நடிக்கிறாரா? என்ற நடவடிக்கைகள்தான், புரியாத புதிராக உள்ளது. நடிகர் என்பதை காட்டிலும், நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் விஷால் உள்ளதால் அனைத்திலும் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டும்" என்று கூறியிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications