பிரியங்காவின் அடுத்த வீடியோவை வெளியிட்ட அவருடைய கணவர்.. பிரிவுக்கு காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக இருக்கும் விஜே பிரியங்கா பற்றி அவருடைய கணவர் வெளியிட்ட வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்காவின் கணவர் வசி ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் தான் பிரியங்காவை பிரிந்திருப்பதாக கூறி இருந்தார். ஆனால் இப்போது தன்னுடைய மனைவி பற்றிய மற்றொரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக ஒரு சில சிலர் சோசியல் மீடியாவில் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நபராகவே இருக்கிறார்கள், அதில் ஒருவர் தான் விஜே பிரியங்கா. இவர் பல வருடங்களாக விஜய் டிவியில் செல்ல பிள்ளையாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் இல்லாத நிகழ்ச்சி விஜய் டிவியில் இருக்கிறதா? என்றால் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. நீயா நானா நிகழ்ச்சி முதல் பிக்பாஸ் வரை எல்லா நிகழ்ச்சிகளும் தான் தொகுத்து வழங்கவில்லை என்றாலும் போட்டியாளராக வந்து அட்டன்டன்ஸ் போட்டு விடுகிறார்.

விஜய் டிவி தொகுப்பாளினி
அதனாலேயே சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் இவர் பரிச்சயமான முகமாக இருக்கிறார். அதுபோல youtube சேனல் ஒன்றில் நிர்வகித்து வரும் பிரியங்கா தன்னுடைய வீடியோக்களையும் அதில் அடிக்கடி போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுபோல instagram போன்ற சோசியல் மீடியா பக்கங்களிலும் செம ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தன்னுடைய சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் தன் தம்பி குழந்தையோடு விளையாடும் க்யூட்டான வீடியோஸ் என்று பலவற்றையும் அதில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.
விஜே பிரியங்காவின் திருமணம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்கள். எனவே விஜய் டிவி பிரபலம் ஒருவரை பிரியங்கா காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். தன்னுடைய முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது என்பதை பற்றி வெளிப்படையாக எந்த இடத்திலும் பேசாமல் இருந்த பிரியங்கா தன்னுடைய இரண்டாவது திருமண புகைப்படங்களை வெளியிட்ட போது அதிகமாக பேசப்பட்டது, அதுபோல திருமணத்திற்கு பிறகு பிரியங்கா விஜய் டிவிக்கு வர மாட்டார் என்று எல்லாம் பலரும் கருத்து கூறி வந்தனர்.
விஜே பிரியங்கா பதிலடி
ஆனால் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தொகுத்து வழங்கும் ஸ்டார் மியூசிக் சீசன் 6 நிகழ்ச்சியில், "எனக்கு விஜய் டிவியில் என்டே கிடையாது" என்று கூறியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க பிரியங்காவின் கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் "மிஸ்ஸஸ் பிரியங்கா தேஷ் பாண்டே வசி எப்போ மீண்டும் நீங்க வர போறீங்க" என்று போஸ்ட் போட்டிருந்தார். அது இணையத்தில் அதிகமாக வைரலானது.
பிரியங்கா கணவர் வீடியோ
அப்போது பிரியங்கா அவருடைய கணவர் வசியை பிரிந்து இருக்கிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்குப் பிறகுதான் பிரியங்காவிற்கு காலில் அடிபட்டு அவருடைய அம்மா வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பிரியங்கா வெளியிட்டு இருந்தார். அதுபோல ஸ்டார் மியூசிக் சூட்டிங்கில் தன்னுடைய அடிபட்ட கால்களுடன் அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் இன்று பிரியங்காவின் கணவர் வசி பிரியங்கா நடக்க முடியாமல் வீல்சேரில் வரும் ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்து இருக்கிறார். அதோடு அந்த வீடியோவிற்கு மாஸாக எடிட் செய்து இருக்கிறார். இந்த வீடியோக்கள் இப்போது மீண்டும் டிரெண்டாக தொடங்கி இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications