வெறுமனே "ஜோ" ன்னு கேட்டா எப்புடி... டென்ஷனாயிட்டாப்டி!
சென்னை: நக்கலைட்ஸ் என்கிற யூடியூப் சானல் வெப்சீரிஸ் அடிக்கடி வெளியிட்டு வருகிறது. இளைஞர்கள் மத்தியில் நக்கலைட்ஸ் கொஞ்சம் பிரபலம்தான். இந்த சானலில் சமூகத்திற்குத் தேவையான கருத்துக்களும் வீடியோக்களாக அவ்வப்போது வெளிவந்துக்கொண்டு இருக்கிறது.
அலும்புநாட்டீஸ் என்று ஒரு வெப் சீரிஸ் .. இப்போது இரண்டாவது எபிசோட் வந்து இருக்கிறது. இதில் இரு பாலர் கல்லூரி மாணவ மாணவிகள் ஹாஸ்டலில் தங்கி படிப்பது பற்றிய கதை போலும். ஹாஸ்டல் பசங்க அடிச்சுக்கறது... கல்லூரி ஹாஸ்டல் மாணவிகளிடம் சில்மிஷம் செய்வது குறித்த எபிஸோட்ஸ் சென்று கொண்டு இருக்கிறது.
ஒருத்தன் கேங் லீடர் மாதிரி இருக்கான். அவனிடம் வந்து ஜோக்கர் போல் இருக்கும் ஒருவன் கேட்கிறான் ஜோ இந்தப் பக்கமா போனானான்னு... அதுக்கு இந்த கேங் லீடர் டென்ஷனாயிட்டாப்டி.. என்ன காரணமா இருக்கும்?

வெப் சீரிஸ்
டிவி சீரியல்களுக்கு என்று எப்படி வியூவர்ஸ் இருக்கிறார்களோ.. அப்படி வெப் சீரீஸ்க்கும் கணிசமான வியூவர்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். வெப் சீரிஸ் நடுநடுவில் அதுவும் அடிக்கடி விளம்பரங்களை போட்டுத் தாக்குவதில்லை. ஒரு பங்களாவில் தனியாக இருக்கும் ஒரு இளம்பெண்.. தண்ணீர் தாகம் எடுத்து, தண்ணீரை குடிக்க அடி மேல் அடி எடுத்து வச்சு...டொய்ங் டொய்ங் என்கிற பின்னணி இசையுடன் பயந்துக்கொண்டே நடந்து போக...

தொடரும் இல்லை
அப்படி பயந்துக்கொண்டே அந்த இளம் பெண் நடந்து போக, அத்துடன் தொடரும் என்று போட்டுவிடும் டிவி சீரியல் போன்ற இழுவை இந்த வெப் சீரிஸில் இல்லை என்பது பிளஸோபிளஸ். இதனால் பசங்க பொண்ணுங்க மொபைலிலேயே வெப் சீரீஸ் பார்த்து விடுகின்றனர். ஒரு சின்ன கதை, கலாட்டா என்று வெப்சீரிஸ் ஒரு எபிசோடிலேயே ஒரு மன நிறைவையும் அது தந்து விடுகிறது.

வெப் சீரிஸ் பிரபலங்கள்
வெப் சீரிஸில் பிரபலங்கள் நடிப்பது என்பது இப்போது ஒரு ஃபேஷனாகி விட்ட நிலையில், இவர்களை வைத்து அமேஸான், நெட்ஃபிலிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற பெரிய பெரிய இணைய தளங்களில் மட்டுமே இவர்களுக்கு உண்டான பேமெண்ட் தர முடிகிறது. யூடியூப் சானல்கள் வைத்திருப்பவர்கள் சாமான்யர்களை நடிக்க வைத்து தங்களது கிரியேட்டிவிட்டியை நிரூபிக்கும் வழிகாட்டியாகவும் இது போன்ற வெப் சீரிஸ் இருக்கிறது.

அலும்பு நாட்டீஸ்
அலும்பு பண்ற பசங்க பற்றிய கதை அலும்பு நாட்டீஸ்.. அலும்பு பண்ற குறும்புத்தனமான பசங்க பற்றிய கதை. ஜோ இந்தப் பக்கமா போனான்னான்னு கேட்டானில்லையா.. கேங் லீடர் கம்முன்னே இருக்கான். டேய் ஜோ.. ஜோயல் இந்தப் பக்கமா போனானா என்று மறுபடியும் கத்தி கேட்க, கேங் லீடர் அவன் தொண்டையில் கையை வச்சு சுவற்றில் சாய்த்து தூக்கறான் பாருங்க...அவனுக்கு ஜோ இந்த பக்கமா போனான்னு கேட்டது, ஜோதிகா இந்தப் பக்கமா போனாங்களான்னு கேட்ட மாதிரி கோவம் வந்தத்துக்கு என்ன காரணமா இருக்கும்? அலும்பு நாட்டீஸ் வெப் சீரிஸ் பாருங்க.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications