ரச்சிதாவை குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட கணவர்..அப்போ எல்லாமே பொய்தானா? அறிவுரை எடுபடுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதாவை பற்றி அவருடைய கணவர் திடீரென வெளியிட்ட பதிவு அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் அவருடைய கணவர் தினேஷ் அறிவுரைகளை கூறும் விதமாக பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவி பிரபலம்
சின்னத்திரை நடிகையான ரச்சிதா பல வருட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார். விஜய் டிவியில் ஏற்கனவே பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானதும் இவருக்கு தான் டைட்டில் ஜெயிப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் விஜய் டிவி பிரபலங்களுக்கு அதிவத்துவமாக முக்கியத்துவங்கள் கொடுக்கப்படும் என்று அதிகமானோர் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்து வந்த நிலையில் போகப் போக ரச்சிதாவின் விளையாட்டு வேறு விதமாக மாறி இருக்கிறது. ரச்சிதாவின் பின்னாடியே இதுவரைக்கும் போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டர் சுற்றிக்கொண்டு இருந்தது, அதை குறித்து ரச்சிதா பெரிய அளவில் மறுப்பும் தெரிவிக்கவில்லையே என்று பலர் கூறி வந்தாலும் ரச்சிதாவின் ரசிகர்கள் அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

சின்ன பிரச்சனை தான்
ரட்சிதா முதல் நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும். அவருடைய கணவர் ரச்சிதா வெற்றி பெற்று அவருடைய ஆசை நிறைவேற வேண்டும், ரசிகர்கள் ரச்சிதாவை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவை வெளியிட்டு இருந்தார் .அதற்குப் பிறகு ரச்சிதாவை பற்றி பல சேனல்களிலும் அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனைகள் அவ்வளவு பெரிய அளவில் இல்லை. சாதாரணமாக கணவன் மனைவிக்குள் வரும் சின்ன பிரச்சனை தான். அது தினேஷ் தனக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்து இரக்கிறார் என்பதை ரச்சிதா வெளியே வந்து பார்த்தாலே புரிந்துவிடும் என்று பலர் கூறி வந்தனர்.

மைனாவை குறித்த கருத்து
பேட்டி ஒன்றில் பேசியிருந்த தினேஷ் ரச்சிதாவோடு ராபர்ட் மாஸ்டரும் மைனாவும் இல்லாமல் இருந்தாலே ரச்சிதா பைனல் வரைக்கும் செல்வார் என்று குறிப்பிட்டு இருந்தார். காரணம் மைனா நந்தினி வெளியே இருந்து ஒரு வாரம் விளையாட்டை பார்த்துவிட்டு சென்ற பிறகும் அவரோடு ராபர்ட் மாஸ்டரை சேர்த்து வைத்து பேசி ஜாலியாக இருந்து வருகிறார். உண்மையான தோழியாக இருந்தால் இப்படி செய்ய மாட்டார். பல வருடங்களாக நட்பாக இருக்கும் மைனா ரச்சிதாவின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும் விதமாக தான் நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து இன்று திடீரென பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

அறிவுரை எடுபடுமா
கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில், "இதுபோல மேலும் இதயங்களை வென்று கொண்டே இருங்கள். நீங்கள் பழி வாங்குபவர்கள், விசுவாசமற்ற நண்பர்கள் தேவையற்ற கதைகள், இவர்களை தவிர்த்து விட்டால் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். ரசிகர்களின் விருப்பப்படியே இறுதியில் வெற்றி பெறுவீர்கள். எல்லோரையும் போல உங்கள் விளையாட்டை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தன்னுடைய ஆதரவை ரச்சிதாவிற்காக கூறியிருக்கிறார். அதுபோல தன்னுடைய ஓட்டு ரச்சிதாவிற்கு தான் என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இந்த வாரத்தில் ஜனனி மற்றும் மைனாவிற்கு ஓட்டு போட வேண்டாம் என்பதை குறிக்கும் விதமாக அவர்கள் இருவருக்கும் எக்ஸ் சிம்பல் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போ பரவி வந்த செய்திகள் எல்லாம் போய் தானா? இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத்தான் போகிறார்களா? என்று மகிழ்ச்சியோடு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பலர் அன்பாக வேண்டுகோள்களையும் வைத்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications