இப்போ "ஆறு மாசம்” சந்தோஷமாக, மகிழ்ச்சியை பகிர்ந்த அனிதா சம்பத்.. காதலை குறித்து உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: செய்தி வாசிப்பாளராகவும் பிக் பாஸ் போட்டியாளராகவும் அனைவருக்கும் பரிச்சயமான அனிதா சம்பத் தற்போது வெளியிட்ட மகிழ்ச்சியான பதிவு ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அனிதா சம்பத் தற்போதைய வாழ்க்கையையும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையையும் ஒப்பிட்டு உருக்கமாக பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

தன்னுடைய காதல் கணவர் ஆரம்ப காலத்தில் தனக்கு செய்த உதவிகளையும் இவர்களுடைய காதல் வாழ்க்கையையும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பிக் பாஸிலும் வெளிப்பட்ட கடந்த கால வாழ்க்கை

பிக் பாஸிலும் வெளிப்பட்ட கடந்த கால வாழ்க்கை

ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய அனிதா சம்பத் இவருடைய நிஜ வாழ்க்கையில் ஆரம்பத்தில் அதிகமான கஷ்டங்களை அனுபவித்து ஒவ்வொரு படியாக முன்னேறி இருக்கிறாராம். இதை பற்றி பல்வேறு இடங்களில் அனிதா சம்பத் கண்ணீர் மல்க கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா கலந்து கொண்டிருக்கும்போது கதை சொல்லும் டாஸ்க்கில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையும் காதல் கணவருடைய வாழ்க்கையும் இவர் சொன்ன விதத்தை நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்தாலும் இவருடைய ரசிகர்கள் இவரை பாராட்டி வந்தனர்.

சொந்த வீடு கனவு

சொந்த வீடு கனவு

இந்த நிலையில் தற்போது அனிதா தான் சொந்தமாக கட்டிய வீட்டிற்கு ஆறு மாதம் ஆகிவிட்டது. அந்த மகிழ்ச்சியை தன்னுடைய ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். அதில், அரை பிறந்தநாள் என்னுடைய வீட்டிற்கு... ஹவுசிங் போர்டு அனிதாவிலிருந்து இப்போ ஹவுஸ் ஓனர் அனிதாவாக சம்பத்தாக மாறிய பயணம் அவ்வளவு எளிமையானது அல்ல. நான் விடியக்கலையில் எழுந்து செய்தி வாசிக்க போறப்ப ,வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருப்பாங்க .நான் வேலை முடிஞ்சி லேட்டா வரும்போது எல்லாரும் தூங்கிடுவாங்க .அப்பா, அம்மா கூட நேரம் செலவிட முடியலையேன்னு அவ்ளோ கவலையாக இருக்கும். ஆனாலும் சின்ன ஷோ, பெரிய ஷோன்னு பார்க்காம நேரம் காலம் பார்க்காமல் நம்ம குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரணும்னு உண்மையா, நேர்மையா, நல்ல சம்பாதிக்கணும் என்கிறதை மட்டுமே நெனச்சு ஆரம்ப காலகட்டத்தில் நான் உழைத்தேன் என்று தன்னுடைய கடந்த கால கஷ்டங்களை பகிர்ந்து இருக்கிறார்.

கண்ணியமான காதல்

கண்ணியமான காதல்

அதுமட்டுமில்லாமல் எனக்கு அந்த கஷ்ட காலங்களில் பக்க பலமாக இருந்தது பிரபா தான். மணிக்கணக்கா போன்ல அப்புறம்... அப்புறம்னு... கொஞ்சி சிணுங்குகிற சினிமா காதல் இல்லை, எங்க காதல். ஆரம்பத்துல இருந்து ரொம்ப முதிர்ச்சியடைந்த காதல். இரண்டு பேரும் மீடியா தான் ஆனாலும் வேற வேற வேலையில் இருந்தோம். எங்க குடும்பங்கள், எங்க முன்னேற்றம், சேமிப்பு, எங்க வேலை எங்க கனவுகள் இதைப்பற்றி தான் அதிகம் பேசிப்போம். இதற்கு இடையே அன்பு ,பாசம், காமெடி ,சிரிப்பு, காதல் எல்லாமும் வந்துவிடும் என்று தன்னுடைய காதல் அனுபவங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அரை பிறந்தநாள்

அரை பிறந்தநாள்

அதோடு எங்க ஆறு வருட காதல் இரண்டு பேருடைய கனவையும் ஒரே கனவாக ஆகுச்சி. 29 ,30 வயசில சொந்த வீடு.. எவ்வளவு காலத்துல சொந்த வீடு வாங்குனது எங்க ரெண்டு பேரு குடும்பத்திலையும் இதுதான் முதல் முறை .எங்க கனவு வீட்டுக்கு இன்று அரை பிறந்தநாள். சொந்த வீடு இருக்கிற பார்ட்னர் தேடுறததை விட, மனசுக்கு புடிச்ச பார்ட்னர் கூட சேர்ந்து உழைச்சு சொந்தமா வீடு வாங்குற சுகம் தான் அழகானது என்று தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையும் அதில் பட்ட கஷ்டங்களையும் தன்னுடைய காதல் வாழ்க்கையையும் அழகாக ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வந்தாலும் நீங்கள் தான் எங்களுடைய முன்மாதிரி என்று பலர் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+