விக்ரமனை பற்றி லைவில் முதல் முறையாக பேசிய அசீம்.. சண்டை, பிரச்சனைகளுக்கு காரணம் இதுதானாம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் தானும் விக்ரமனும் நல்ல நண்பர்கள் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்று கூறி இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி டைட்டில் வின்னரான அசீம் முதல் முறையாக விஜய் டிவி இன்ஸ்டாகிராம் லைவ் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமனை பற்றி அசீம் நாங்கள் இருவரும் டாஸ்க் விஷயங்களில் மட்டும்தான் சண்டை போட்டு இருக்கோம். ஆனால் எங்கள் இருவருக்கும் கருத்து ஒன்று தான் என்று கூறி இருக்கிறார்.
என்னையும் விக்ரமனையும் பற்றி தவறாக பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பரவுகிறது ஆனால் நாங்கள் இருவரும் நட்பாக இருக்கிறோம் பார்க்கும் இடங்களிலும் பேசிக்கொள்வோம் என்று அசீம் கூறியிருக்கிறார்.

அசீமின் முதல் லைவ்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் முதல் முறையாக இந்த சீசனில் டைட்டில் வின்னர் அசீம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டாரின் பேஜில் லைவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். ஏற்கனவே இந்த சீசனில் ரன்னராக இருந்த விக்ரமன் பேட்டி கொடுத்திருந்த நிலையில் டைட்டில் வின்னர் பேட்டி கொடுக்கவில்லையே என்று ரசிகர்கள் அதிகமாக கேள்வி எழுப்பிக் கொண்டு காத்திருந்தனர். தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அசீம் பேசி இருக்கிறார்.

நல்ல நண்பர்கள்
அதில் ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து இருந்த கேள்விகளை எல்லாம் அசீம் இடம் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விக்ரமன் பற்றி அசீமிடம் கேட்கும் போது விக்கிரமனும் நானும் நல்ல நண்பர்கள்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நாங்கள் இருவரும் டாஸ்க் விஷயத்தில் மட்டும்தான் சண்டை போட்டு இருக்கிறோம். மத்த நேரங்களில் நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம். நாங்கள் இருவரும் ஒரே பெட்டில் தான் தூங்கினோம். அதனால் இரவு நேரத்தில் கூட நாங்கள் பல விஷயங்களை ஷேர் செய்து பேசிக்கொண்டிருப்போம். டாஸ்க் தாண்டி எங்கள் இருவருக்கும் கருத்து ஒன்றாகத்தான் இருக்கிறது.

ரசிகர்களிடம் வேண்டுகோள்
வெளியே இருக்கும் சிலர் தான் எங்களுக்குள் பிரச்சனை என்கிற மாதிரி மாயையை உருவாக்கி விட்டார்கள். மத்தபடி எங்களுக்குள் அப்படி ஒரு பிரச்சனை எதுவும் கிடையாது. எங்கள் இருவருக்கும் ஒரே கருத்து கொள்கை தான் இருக்கிறது. அதில் வேறுபாடு எதுவும் இல்லை. எங்கள் இருவருக்கும் டாஸ்க் விஷயத்தில் மட்டும்தான் சண்டை வந்திருக்கிறது. மத்தபடி வெளி உலகத்தை சார்ந்தது கிடையாது. உள்ளே நடக்கும் டாஸ்க்கள் மற்றும் சில வார்த்தைகளில் பிரதிபலிப்பாக தான் சண்டைகள் ஏற்படுகிறது. அதனால் அதை வைத்து இவர்கள் இப்படித்தான் என்று யாரையும் ஜட்ஜ் செய்யாதீர்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

வெளியே தான் தப்பா மாறிடுச்சி
நானும் விக்ரவனும் வெரி குட் ப்ரண்ட் அவருக்கும் எனக்கும் கோபத்தினால் மட்டும்தான் சண்டை வந்திருக்கு, தவிர கொள்கை ரீதியில் எந்த சண்டையும் வந்தது கிடையாது. எனக்கு பிடிச்ச விஷயத்தை விக்ரமிடம் நான் கூறியிருக்கிறேன். விக்ரமன் என்ன கோபப்பட்டாலும் தன்னிலை மாறாமல் இருக்கிறார் என்று நான் பாராட்டி இருக்கிறேன். அதுபோலத்தான் எனக்கு இப்பவும் விக்ரமனோடு எந்த பிரச்சனையும் கிடையாது .இப்போதும் வெளியே செல்லும்போது நான் விக்கிரமனை பார்த்தால் ஹாய் விக்ரம் எப்படி இருக்கீங்க என்று நான் கேட்பேன். அவரும் என்னிடம் அப்படித்தான் கேட்பார் ஆனால் வெளியே ப்ராஜெக்ட் பண்ணினது தப்பா பண்ணிட்டாங்க என்று கூறி இருக்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications