விக்ரமன் பற்றி தனலட்சுமி கூறிய கருத்து.. வெளியே வந்ததும் எல்லாம் மறந்து போச்சா? ரசிகர்கள் கேள்வி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி முதல் முறையாக லைவில் வந்துள்ளார்.
நிகழ்ச்சிக்குள் இருக்கும் போட்டியாளர்களின் கேரக்டரை பற்றி ரசிகர்களின் கேள்விக்கு தனலட்சுமி பதில் கூறியிருக்கிறார்.
விக்ரமன் பற்றி வெளியே வந்ததும் அவர் உள்ளே நடித்துக் கொண்டிருக்கிறார் ஏமாற்றுகிறார் என்று பல குற்றச்சாட்டுகளை தனலட்சுமி கூறியிருக்கிறார்.

லைவில் வந்த தனலட்சுமி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தனலட்சுமி ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தான் முதல்முறையாக லைவில் வந்திருக்கிறார். தனலட்சுமிக்கு என்ன ஆனது எதனால் அவர் வெளியே முகத்தை காட்டாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் அதிகமாக கேள்வி எழுப்பி வந்தனர். அது மட்டுமல்லாமல் தனலட்சுமி வைல்ட் கார்டு ஆக மீண்டும் உள்ளே வருவதற்காகத்தான் அவர் ரகசியமாக இருக்கப்பட்டிருக்கிறாரா? என்றெல்லாம் அவரைக் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணமாகவே இருந்தது. அதையெல்லாம் பொய் என்று கூறும் வகையில் இன்று லைவில் வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலை கூறியிருக்கிறார்.

அசீம் தான் பிடிக்குமாம்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இருந்த தனலட்சுமியின் கருத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மாறி போய்விட்டது என அவருடைய இன்றைய லைவ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் உங்களுக்கு யாரை அதிகமாக பிடிக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப அதற்கு தனக்கு அசீம் தான் அதிகமாக பிடிக்கும் என்று கூறி இருக்கிறார். உள்ளே இருக்கும்போது அடிக்கடி அசீம் கூட சண்டை இட்டு உங்களோடு என்னால் பேச முடியாது வெளியே போய் கூட உங்களிடம் பேசமாட்டேன் என்றெல்லாம் கூறிய அதே தனலட்சுமி இப்போது அசீம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான நபர் என்று சர்டிபிகேட் கொடுத்து கொண்டிருக்கிறார். இதை குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விக்கிரமனை பிடிக்காதாம்
அதுமட்டுமில்லாமல் விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருப்பவர்களில் யார் உங்களுக்கு பிடிக்காது என்று ரசிகர்களின் கேள்விக்கு விக்கிரமன் தான் என்று கூறி இருக்கிறார். ஏன் என்ற கேள்விக்கு, வெளியே அவருக்கும் எனக்கும் எப்படி என்று எனக்கு தெரியாது. ஆனால் கேமில் அந்த வீட்டில் இருந்த வரைக்கும் ஏ டி கே மற்றும் விக்ரமன் எனக்கு பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.

அது மறந்து போச்சா தனலட்சுமி
அதுமட்டுமில்லாமல் நேற்று எபிசோட்டில் காலால் பன் பிடித்து சாப்பிட வேண்டும் என்கிற டாஸ்கை பார்க்கும்போது அதில் விக்ரமன் திணருவதை பார்க்கும் போது இந்த மாதிரி டாஸ்க் எல்லாம் இவருக்கு சரிப்பட்டு வராது அதனால் தான் அவர் பிக் பாஸ் இடம் இப்படி டாஸ்க் வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி விஷயத்தாலும் எனக்கு விக்ரமனை பிடிக்காது என்று தனலட்சுமி லைவில் பேசியிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் தனலட்சுமிக்கு அதிகமான நேரங்களில் சப்போர்ட் செய்தவர் விக்ரமன் தான் ஆனால் அதையெல்லாம் தனலட்சுமி மறந்து விட்டாரா? அல்லது வெளியே வந்ததும் அந்த எபிசோடுகளை மட்டும் பார்க்காமல் விட்டு விட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications