Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிகழ்ச்சியை விட்டு வீட்டிற்கு வந்த ரச்சிதா.. வரவேற்க தயாராக இருந்த அந்த நபர்.. பல நாள் கழித்து!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதாவை வரவேற்பதற்காக அவருடைய குடும்பத்தினர் வெகு விமர்சனமாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

ரச்சிதாவின் வீட்டில் அவருடைய ரசிகர்களும் உறவினர்களும் அனைவரும் குவிந்து இருக்கின்றனர்.

அந்த வகையில் ரச்சிதாவின் உடன் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகை பிரேமி வெங்கட் ரச்சிதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

குடும்பத்தினரின் வரவேற்பு

குடும்பத்தினரின் வரவேற்பு

நடிகை ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் அவருடைய அவர் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் ஏமாற்றம்தான் ரச்சிதா கடைசி ஐந்து போட்டியாளர்கள் இடத்தில் இருப்பார் என்று அவருடைய ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த வாரம் அவர் திடீரென வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இந்த இந்நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக ரச்சிதா லைவ்வில் தன்னுடைய ரசிகர்களோடு பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய வீட்டிலும் ரச்சிதாவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

பிரம்மாண்டமான மாலை

பிரம்மாண்டமான மாலை

ரச்சிதாவின் கார் வந்ததும் அவருடைய வீட்டின் முன்பு சரவெடியை வெடித்து குடும்பத்தினர் கொண்டாடி இருக்கின்றனர். ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருந்து பேசிய அவருடைய பெரியம்மா குடும்பத்தினரும் ரச்சிதாவை வரவேற்க வந்திருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் தனக்கு நெருக்கமாக இருந்த அதே பிளாப்பி பொம்மையை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார். ரச்சிதா வந்து இறங்கியதும் அவருக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கின்றனர். பின்பு அங்கே பெரிய பிரம்மாண்டமான ஒரு ரோஜா பூ மாலையை ரச்சிதாவின் கழுத்தில் அணிந்து அவரை பிரமிக்க வைக்கின்றனர்.

அந்த விதம் பிடித்திருந்தது

அந்த விதம் பிடித்திருந்தது

இந்த நிலையில் ரச்சிதாவை பார்ப்பதற்காக அவரோடு நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகை பிரேமி வெங்கட் வந்திருக்கிறார். ரச்சிதாவை பார்த்ததும் அவர் சில புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து அதில்,,ஹாய் மை டியர் ரச்சு எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து, 90 நாட்களுக்கு மேல் அப்புறம் பிக்பாஸிலிருந்து நீ வெளியே வந்ததுக்கு அப்புறம் நான் இன்னைக்கு உன்னை மீட் பண்ணி இருக்கேன் ரொம்ப சந்தோஷமாக இருக்கு எவ்வளவு நாளாச்சு அப்படி ஒரு சந்தோஷம், ரொம்ப நல்லா பிக் பாஸ் ப்ளே பண்ணுனா, மை டியர் உனக்கு நிறைய பிரச்சனைகள் கண்டிப்பா வந்திருக்கும். சோதனைகள் வந்திருக்கும் அது எல்லாம் ரொம்ப பொறுமையா ஹேண்டில் பண்ணுன விதம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது.

அதற்குப் பதில் இதுதான்

அதற்குப் பதில் இதுதான்

எல்லோருக்கும் சமையல் சமைச்சு போட்டு எல்லார் கூடயும் ரொம்ப பிரெண்ட்ஸாக இருந்து மக்கள் மனசுல அவ்ளோ அழகான இடம் பிடித்து, எனக்கு பிடிச்சிருந்தது. எல்லா கேமும் அவ்வளவு அற்புதமாக விளையாடிய, நீ எப்படியாவது டாப் 5 கண்டெஸ்டெண்ட்ல ஒரு ஆளா நிச்சயம் வந்துருவேன் அப்படிங்கிற பெரிய நம்பிக்கை எனக்குள்ள இருந்தது. ஆனா வர முடியல உனக்கும் அலாதியான ஒரு நம்பிக்கை இருந்திருக்கும் ஆனால் ஏன் நம்ம 90 டேஸ்ல வெளியே வந்து இருப்போம் ஏன் டா பைனல் வரலன்னு அப்படியே நம்ம யோசிச்சோம்னா அதுக்கு ஒரு ஆன்சர் தான் இதைவிட பெரிய உயரத்திற்கு நம்ம போக போறோம்

அதுவே பெரிய சாதனை

அதுவே பெரிய சாதனை

நம்ம தான் ஃபர்ஸ்ட் அப்படிங்கிற ரேஞ்சில நம்ம நிச்சயம் வரப்போறோம் கண்டிப்பா வருவோம் நீ எந்த ஃபீலும் பண்ணிக்காத உனக்காக ஷோ உனக்கு நிச்சயமா கிடைக்கும். நீயும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருவ. எப்படி இருந்தது? எப்படி இருக்க முடிஞ்சது உள்ளே? அதுவே ஒரு பெரிய சாதனைதான். இங்கே அத்தனை பேரும் உன்னுடைய ஃபேன்ஸ் பாலோவர்ஸ் அத்தனை பேரும் உனக்காக சப்போர்ட் பண்ணி இருக்காங்க. அவங்களுடைய வேலைகள் எல்லாம் விட்டுட்டு உனக்காக நேரம் ஒதுக்கி நிறைய கமெண்ட்ஸ் நிறைய ஃபோட்டோ ஷேர் பண்ணுவது எல்லாமே பண்ணி இருந்தாங்க. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவங்க எல்லோருக்கும் உன்னுடைய சார்பாக நன்றி சொல்லிக்கிறேன். இன்னும் நிறைய உயரத்திற்கு நீ போகணும் 90 நாட்களுக்கு அப்புறம் உன் கூட சேர்ந்து எடுத்துகிட்டு செல்பி எனக்கு ஃபர்ஸ்ட் நம்ம எடுத்து செல்பி ஞாபகப்படுத்துவது. மொபைல் இல்லாமல் உன்னால் எப்படி இருக்க முடிந்தது அதுவே ஒரு பெரிய சாதனையா தான் நினைக்கிறேன்.

அனைத்தும் திரும்ப கிடைக்கும்

அனைத்தும் திரும்ப கிடைக்கும்

அது மட்டுமில்லாமல் நீ எல்லோரையும் மிஸ் பண்ணி இருப்ப உறவுகள் நண்பர்கள் என அத்தனையும் திரும்ப கிடைக்கும், சந்தோஷம் கிடைக்கட்டும், நிம்மதி கிடைக்கட்டும் ,நல்ல ரெஸ்ட் எடு திரும்ப எழுந்து வா, நம்ம மறுபடியும் ஃபர்ஸ்ட் பொசிஷனுக்கு முயற்சி பண்ணுவதற்கு ரைட் ஆல் த பெஸ்ட் மை டியர் எல்லா வித வெற்றியும் உனக்கு கண்டிப்பா கிடைக்கும். லவ் யூ மை டியர் என்று உருக்கமாக ரச்சிதாவை நினைத்து அவருக்காக பதிவு வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+