மாட்டுக்கறி பிரியாணி கேட்டதால் தான் விக்ரமன் தோற்றாரா?பா.ரஞ்சித் விளக்கம்.. பிக் பாஸ் பற்றி கருத்து?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் மாட்டுக்கறி பிரியாணி கேட்டதால் தான் தோற்றாரா? என்ற கேள்விக்கு பா. ரஞ்சித் அதை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நான் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். நான் ஜெயித்துக் க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை பற்றி முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை அதனால் அதைப் பற்றி எனக்கு தெரியாது என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் தோற்றதற்கு காரணம் மாட்டுக்கறி பிரியாணி கேட்டதினால் தான் என்ற கேள்விக்கு பா. ரஞ்சித் அதைப்பற்றி எனக்கு தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி இருக்கிறார்.

ஒரு வாரம் ஆகியாச்சி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வாரம் ஆன நிலையிலும் அந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு சமூக வலைத்தளத்தில் அதிகமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முன்பு 5 சீசன்கள் முடிவடைந்து இருந்தாலும், இந்த அளவிற்கு பரபரப்பை கடைசி முடிவு ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த சீசனில் முடிவு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பலரை கொண்டாடவும் வைத்திருக்கிறது. அதனால் இருதரப்பட்ட கருத்துக்கள் இப்ப வரைக்கும் அதிகமாக எழுந்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி முடிவு பற்றி பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் இயக்கும் திரைப்படத்தைப் பற்றி பிரஸ் மீட்டீங்கில் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் தோற்றத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு நான் அதை பார்க்கவில்லை அதனால் எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்று கூறியிருக்கிறார்.

அது தெரியாதாம்
அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் நிகழ்ச்சியின் கடைசி முடிவு நாளுக்கு முன்புதான் மாட்டுக்கறி பிரியாணி கேட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்,அதனால் தான் அவர் தோற்றுவிட்டாரா? என்று பா. ரஞ்சித் இடம் கேள்வி கேட்க அதற்கு அவர் அது எனக்கு தெரியாது, ஆனால் நான் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிடுவேன் நான் தோற்கவில்லை ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே சமுதாயத்தில் மாட்டுக்கறி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு ஆதரவாக இருந்து வரும் பா. ரஞ்சித் தன்னுடைய பதிலை சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.

முடிவடையாத கருத்து மோதல்கள்
சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் விக்ரமன் மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுக்கறி கேட்டது தவறு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் அசீமும் தான் மாட்டுக்கறி சாப்பிடுவார் ஆனால் எதற்காக அவருக்கு மட்டும் டைட்டில் கொடுத்தீர்கள் என்று கேள்வி கேட்க அசீம் வெளிப்படையாக கேமரா முன்பு தனக்கு மாட்டுக்கறி பிரியாணி தான் வேண்டும் என்று கேட்கவில்லையே? இது விக்ரமனை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது என்று இன்னொரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு இரண்டு வாரம் ஆன நிலையிலும் அந்தப் பிரச்சனையினால் இப்பவும் சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications