தன் பதிவில் சின்மயி வைரமுத்து பற்றி வெளியிட்ட கருத்து... அர்ச்சனாவின் எதிர்பார்க்காத பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜா ராணி சீரியலை விட்டு விலகிய விஜே அர்ச்சனா சமீபத்தில் வைரமுத்துவை சந்தித்து அவரோடு எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

விஜே அர்ச்சனா வெளியிட்ட பதிவுக்கு பாடகி சின்மயி கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

சின்மயி கருத்துக்கு தற்போது விஜே அர்ச்சனா பதில் கூறி இருக்கிறார்.

அர்ச்சனா வெளியிட்ட புகைப்படம்

அர்ச்சனா வெளியிட்ட புகைப்படம்

சமீபத்தில் விஜே அர்ச்சனா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கே சிறப்பு விருந்தினராக வந்த வைரமுத்து உடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்களில் வைரமுத்து அர்ச்சனாவை ஆசீர்வாதம் செய்திருப்பார். இது தனக்கு கிடைத்த ஒரு வரத பிரசாதம் என்று அர்ச்சனா நெகிழ்ச்சியோடு அதை குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் புது திரைப்படத்தில் அர்ச்சனா இணைந்திருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

ராஜா ராணி 2 அர்ச்சனா

ராஜா ராணி 2 அர்ச்சனா

ஆதித்யா தொலைக்காட்சியின் மூலமாக விஜேவாக அறிமுகமான அர்ச்சனா அதற்குப் பிறகு இன்ஸ்டா மூலமாகவே இவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவராக அர்ச்சனா கலந்து கொண்டிருந்தார். அதன் பிறகு பல்வேறு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். தொகுப்பாளராக இருந்த இவருக்கு பெரிய அளவில் பெயரை வாங்கிக் கொடுத்தது ராஜா ராணி சீசன் 2 தான். இந்த சீரியலிலும் அர்ச்சனாவாக நடித்திருந்தார். ஆனால் திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார். ஆனால் விலகியதற்கான காரணம் என்னவென்று இப்ப வரைக்கும் வெளியே கூறவில்லை.

சின்மயின் கருத்து

சின்மயின் கருத்து

இந்த நிலையில் அர்ச்சனா வைரமுத்துவை சந்தித்திருக்கிறார் அவரோடு எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்கு அதிகமானோர் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட இந்த புகைப்படத்தை குறித்து பாடகி சின்மயி, ஆரம்பத்தில் இதுபோலத்தான் இருக்கும். தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள் அவரை சந்திக்கும் போது யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள் என்று கருத்து வெளியிட்டு இருக்கிறார்.

அர்ச்சனாவின் பதில்

அர்ச்சனாவின் பதில்

இதனால் இந்த கமெண்ட் அர்ச்சனா டெலிட் செய்திருக்கிறார். ஆனால் ஒரு சிலர் அர்ச்சனா டெலிட் செய்த கமெண்ட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அர்ச்சனாவிடம் வைரமுத்து குறித்த பதிவில் சின்மயி போட்ட கமெண்ட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் நான் எப்போதும் போல அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. நான் அந்த பதிவை போட்டதற்கு காரணம் என்னுடைய தந்தை ஒரு தமிழ் பேச பேராசிரியர். எங்கள் குடும்பத்தில் தமிழுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. எல்லோரும் வைரமுத்து சாருடைய சினிமா பாடலை தான் கேட்டிருப்பார்கள் ஆனால் நான் கேட்டது நாக்கு செவந்தவரை என்ற பாடல் தான் .

ஊர் வாயை மூட முடியாது

ஊர் வாயை மூட முடியாது

நான் படப்பிடிப்பில் இருந்தபோது அவரை திடீரென்று மேடையில் சந்தித்ததும் நான் ஹாய் சார் எப்படி இருக்கீங்க நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்று சொன்னதும். அவர் என்னை ஆசீர்வதித்தார் அவ்வளவுதான். நான் அவரிடம் பேசி இருந்தேன். எனக்கு சின்மயியை தனிப்பட்ட முறையில் யாரென்று தெரியாது. ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அனைவரும் பேச தான் செய்வார்கள். ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது. இது ஒரு ஃபேன் கேர்ள் மூவ்மெண்ட இதைப் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அப்படியே போகட்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+