எல்லோரும் மன்னிச்சிருங்க என்னால் முடியல... பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனி வெளியிட்ட முதல் பதிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியேறிய ஜனனி முதல் முறையாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஜனனி தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களிடமே மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

முதல் பதிவு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று வெளியேற்றப்பட்ட ஜனனி இப்ப வரைக்கும் அவருடைய வெளியேற்றம் பொய்யானது சேனல் தரப்பில் இருந்து அவருக்கு எதிராக செயல்பட்டு விட்டனர் என்று பல்வேறு கருத்துகளை ரசிகர்கள் வெளியிட்டு வரும் நிலையில் முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதிகமான ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு போட்டோ சூட்டையும் எடுத்து அதை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

மேடையில் நன்றி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக முதல் முறையாக ஜனனி அறிமுகமானதும் அவருக்கு தான் அதிகமான ரசிகர்கள் ஆர்மி அமைத்தனர். ஆரம்பத்தில் இருந்தே ஜனனிக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்கள் கடந்த வாரமும் அதிகமான ஓட்டுகள் செலுத்தி இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அணியினர். திடீரென்று ஜனனியை வெளியேற்றி இருக்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் தனக்கு அதிகமான ஆதரவு தந்ததை குறித்து கமல் முன்னிலையில் மேடையில் கூட ஜனனி நன்றி கூறியிருந்தார். அதுபோல தற்போது சமூக வலைத்தளத்திலும் ரசிகர்களுக்கு மனமுருகி பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களிடம் மன்னிப்பு
நான் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறேன் என என்னை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்கள் வாக்குகளால் நீங்கள் அனைவரும் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தி உள்ளீர்கள். இந்த நாட்களில் உங்களது எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் என்னை மன்னிக்கவும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ஜனனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் யாருக்கும் இல்லாத வகையில் ஜனனிக்கு தான் அதிகமான நேரம் பயண வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுவே இவருக்கு கிடைத்த பாராட்டு என்று பலர் கூறி வருகிறார்கள்.

இலங்கைப் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக இலங்கையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள சமீப காலமாகவே ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சீசன் 3இல் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இருவர் கலந்து கொண்டனர். அது போல சீசன் 5இல் மதுமிதா இருந்தார். அதை தொடர்ந்து சீசன் 6வது நிகழ்ச்சியில் யாராவது களம் இறங்குவார்கள் என்று அதிகமாக எதிர்பார்க்கட்ட நிலையில் ஜனனி செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்த நிலையில் கலந்து கொண்டிருந்தார். குறைந்த வயது உடையவர் ஜனனி தான். அதனாலே ஆரம்பத்தில் இருந்து சக போட்டியாளர்களும் இவருக்கு சில சலுகைகளை கொடுத்துக் கொண்டுதான் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஒரு சிலரோடு கருத்து வேறுபாட்டில் இருந்து வந்தார். குறிப்பாக ஷிவினோடு கருத்து வேறுபாடு இருந்து வந்தார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications