ஒரு வழியாக பாரதிகண்ணம்மா கிளைமேக்ஸ் ஷூட்டிங்.. ஆனால் அந்த நபர் மட்டும் மிஸ்ஸிங்.. எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகத்தின் கடைசி நாள் சூட்டிங் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

பல வருடங்களாகவே எதிர்பார்த்து இருந்த பாரதி கண்ணம்மா சீரியலின் முடிவு தற்போது நிகழப்போகிறது என அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவர் கிளைமாக்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

மொத்த கதையும் டிஎன்ஏ டெஸ்டில் தான்

மொத்த கதையும் டிஎன்ஏ டெஸ்டில் தான்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மொத்த கதையும் ஒரே டிஎன்ஏ டெஸ்டில் அடங்கிவிடும் நிலையில் இருக்கும்போது ரசிகர்கள் பலர் இந்த சீரியல் எப்போது முடிவடையும் என்று ஆரம்ப முதலே கேட்டு வந்தனர் . பல வருடங்களாக டிஎன்ஏ டெஸ்ட் என்ற ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதாக பலர் நெகட்டிவ் கருத்துக்களை கூறி வந்தாலும், இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கின்றது. இந்த நிலையில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் மூன்றாவது முறையாக எடுத்திருக்கிறார்.

டிஎன்ஏ டெஸ்ட் முடிவுக்கு காத்திருக்கும் பாரதி

டிஎன்ஏ டெஸ்ட் முடிவுக்கு காத்திருக்கும் பாரதி

பாரதி டிஎன்ஏ டெஸ்ட் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வெண்பாவின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவருக்கு தெரிந்து விட்டது .இந்த நிலையில் கண்ணம்மா ஒரு பக்கம் நாம் மீண்டும் சேர்ந்து வாழலாமா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்புவரைக்கும் கண்ணம்மா நீ செய்த தப்பை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு வந்தால் தான் நான் உன்னை ஏற்றுக்கொள்வேன் என்று கூறி வந்த நிலையில் இப்போது அந்த ஒரு நிபந்தனையை தளர்த்தி நாம் ஒன்றாக வாழலாம் என்று இறங்கி வந்திருக்கிறார். இப்போதும் கூட பாரதி டி என் ஏ முடிவுக்காக காத்திருக்கிறார்.

வெளியானது கிளைமாக்ஸ் வீடியோ

வெளியானது கிளைமாக்ஸ் வீடியோ

இதுவரைக்கும் பாரதி தான் தன்னுடைய அப்பா என்று நினைத்துக் கொண்டிருந்த ஹேமா தன்னுடைய அம்மா கண்ணம்மா என்ற உண்மையை தெரிந்து கண்ணம்மாவோடு சென்றுவிட்டார். ஆனால் தன்னுடைய அப்பா யார் என்று கேள்வியை பாரதி இடமே கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இதற்கு பதில் சொல்ல முடியாமல் பாரதி எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார் .இந்த நிலையில் இந்த சீரியலில் பாரதியின் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்து வந்த ரியாத் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் என்று கூறி இருக்கிறார்.

கண்ணம்மா மட்டும் மிஸ்ஸிங்

கண்ணம்மா மட்டும் மிஸ்ஸிங்

அந்த வீடியோவில் ஹேமா மற்றும் வெண்பாவின் தலையில் அடிபட்டு இருக்கிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் நடித்து வந்த அத்தனை கேரக்டர்களும் சீரியலில் கிளைமாக்ஸில் இருக்கின்றனர். ஆனால் அந்த வீடியோவில் கண்ணம்மா மட்டும் மிஸ் ஆகி இருக்கின்றார் .மருத்துவமனையில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் குடும்பத்தினர் அனைவரும் இருக்கின்றனர். அதுபோல வெண்பா, ரோஹித் ,ஷர்மிளா ,வெண்பா வீட்டு வேலைக்காரப் பெண் சாந்தி என பலரும் அங்கேதான் இருக்கின்றனர். ஏற்கனவே பாரதி இப்போது வேலை செய்து வரும் மருத்துவமனையில ரியாத் உடல்நிலை சரியில்லாமல் சேர்ந்திருந்தார். அதே கெட்டப்பில் தான் அந்த வீடியோவில் இருக்கிறார். அதனால் பாரதி கண்ணம்மா சீரியலின் கிளைமாக்ஸ் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது .மருத்துவமனையில் தான் மொத்த உண்மையையும் தெரிந்து சீரியல் கிளைமாக்ஸ் நடக்க இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+