அந்த ஒரே செயலால் பிரபலமான ஷிவின்.. பல பேர் மனதை உடைத்து விட்டாரே.. வெளியே கசிந்த ரகசியங்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட்டில் கதிர் உடைய குடும்பத்தினர் வந்திருந்த நிலையில் அமுதவாணன் அதிகமாக கலாய்த்ததால் ஷிவின் கண்கலங்கி அழுது இருக்கிறார்.
ஆரம்பத்திலிருந்து அனைவரும் கதிரவனை வைத்து ஷிவினை கலாய்த்த நிலையில் நேற்று கதிரவனின் காதலியை பார்த்த பிறகு ஷிவினின் செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
குழந்தை குறித்து ரகசியமாக பேசிய ரச்சிதா.. அம்மா கூறிய அந்த வார்த்தை.. கணவரின் எதிர்பாராத பதில்\

திருநங்கைப் போட்டியாளர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு திருநங்கை போட்டியாளராக ஷிவின் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த சீசனில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக நமீதா மாறி முத்து கலந்து கொண்ட நிலையில் இவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இந்த முறையும் அதே பாணியை பிக் பாஸ் கையில் எடுத்திருக்கின்றது. பிக் பாஸ் அணியினர் எதிர்பார்த்தபடியே இந்த முறை ஷிவின் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக செல்வாக்கு உள்ளவராக வலம் வருகிறார். ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் கூட ஷிவினுக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

குடும்பத்தினரின் செயல்
ஒரு நபர் திருநங்கையாக மாறினால் வெளியே கிடைக்கும் ஆதரவும் வெறுப்பும் வீட்டுக்குள்ளேயும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கும் என்பது சில நேரங்களில் பலர் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஷிவினுக்கு வெளியே ஆதரவு கிடைத்துக் கொண்டிருந்தாலும் பலர் அவருடைய விளையாட்டை தவறாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் ஷிவினுடைய சொந்த அம்மா மற்றும் அக்காவே அவருக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பலருடைய மனதை கஷ்டப்படுத்தியது என்று கருத்து கூறி வருகின்றனர். இன்னும் சமுதாயத்தில் பலர் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் திருநங்கைகளாக மாறினால் ஏற்றுக் கொள்ளாதவர்களாக தான் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

குயின்சியின் சேட்டை
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளே ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் காட்சிகள் தொடங்கி விடுவது வாடிக்கையானது தான். முதல் சீசனில் தொடங்கி ஐந்தாவது சீசன் வரைக்கும் இதுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆறாவது சீசனில் யார் காதல் புறாவாக மாறுவார்கள் என்று ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஷிவினுக்கு கதிரவன் மீது ஒரு கிரஷ் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். அனைவரிடமும் நடந்து கொள்ளும் விதமும் கதிரவனிடம் நடந்து கொள்ளும் விதமும் வேறு விதமாக இருப்பதாகவே ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் தெரிந்து விட்டது. அதனாலே குயின் சி ஆரம்பத்தில் இருந்து ஷிவினை வெறுப்பேற்றுவதற்காக கதிரவனோடு நெருக்கமாக இருப்பதாகவும் அவரை காதலிப்பது போன்று சில சேட்டை செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

கதறி அழுத ஷிவின்
தன்னைத்தான் அனைவரும் கலாய்க்கிறார்கள் என்று தெரிந்தாலும் ஷிவின் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சிரித்தபடியே இதனை நாட்களை கடந்து வந்தார். ஆனால் நேற்றைய எபிசோடில் கதிரவனின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது கதிரவனின் அம்மா ஷிவினை நீ எனக்கு இன்னொரு மகள் என்று சொன்னதும் சக போட்டியாளர்கள் அவரை வைத்து கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அப்போது கூட ஷிவின் பெரிய அளவில் எக்ஸ்பிரஷன் காட்டவில்லை என்றாலும் கதிரவனின் நெருங்கிய தோழி வந்ததும் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அமுதவாணன் ஷிவினை அந்த இடத்தில் இருந்து கூட்டிக்கொண்டு வந்து பாட்டு பாடி கலாய்த்து கொண்டிருக்கிறார். பொறுமையாகவே சிரித்துக் கொண்டிருந்த ஷிவின் ஒரு கட்டத்துக்கு மேலே கதறி அழுது கொண்டுவிட்டார்.

அதிகரிக்கும் ஆதரவு
இதனாலேயே தற்போது ரசிகர்கள் அதிகமாக ஷிவினுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். திருநங்கையாக இருக்கும் நபருக்கும் காதல் இருக்க தானே செய்யும். ஆரம்பத்தில் இருந்தே அந்த பெண்ணை அதிகமாக கலாய்த்து அவருடைய மனதில் ஆசையை வளர்த்து விட்டு இப்படி கடைசியில் ஏமாற்றம் செய்யலாமா? என பலர் ஷிவினுக்கு ஆதரவாக மீம்ஸ்களை வெளியிட்டு கருது தெரிவித்து வருகின்றனர். முதல் சீசனில் ஓவியா மற்றும் ஆரவ் இடையே நடந்த அதே பாச போராட்டம் தற்போது நடப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது இந்த சீசனில் அதிகமாக ஷிவனுக்கு ஆதரவு தற்போது எகிற தொடங்கி இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications