சீரியல் தொடங்கி சில நாளிலே டிஆர்பியில் இவ்ளோ மாற்றமா? இவ்வளவு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கலையே!
சென்னை: சன் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களில் ஒரே நேரத்தில் 9 மணிக்கு புது சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
சன் டிவியில் இனியா சீரியலும் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டிஆர்பியில் மாற்றம் கிடைத்திருக்கிறது.

சன் டிவி சீரியல்கள்
ஆரம்ப காலகட்டம் முதலில் சீரியல்கள் என்று சொன்னாலே சன் டிவி சீரியல்களை அடித்துக் கொள்ள முடியாது என்று சொல்லும் நிலை தான் இருந்து வந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சன் டிவிக்கு எதிராக பல சேனல்கள் முளைத்து விட்டன. அதுவும் சன் டிவி சீரியல்களை டிஆர்பி யில் முந்துவதற்காகவே பல சேனல்களில் புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நேரங்களில் எத்தனை சீரியல்கள் வந்தாலும் எங்கள் இடத்தை பிடிக்க முடியாது என்று சன் டிவி சீரியல்கள் நிரூபித்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது கூட ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பி வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இனியாவுக்கு கிடைத்த வரவேற்பு
விஜய் டிவியில் கதாநாயகியாக நடித்து வந்த ஆலியா மானசா நீண்ட இடைவெளிக்குப் பிறகு சன் டிவியில் முதல்முறையாக இனியா சீரியலில் நடித்து வருகிறார். ஆரம்பத்திலிருந்து ஆலியா மானசா நடிக்கும் புது சீரியலுக்காக அவருடைய ரசிகர்கள் காத்து இருந்து, தற்போது அந்த சீரியலுக்கு அதிகமாக வரவேற்பு கொடுக்க தொடங்கி இரக்கின்றனர். புது கதை களத்தோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
சுயமரியாதையோடும் துடுதுடுப்போடும் இருக்கும் இனியா ஆண் என்று ஆணவத்தில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகரிக்கும், ஆண் பெண் அனைவருமே சமம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இனியாவிற்கும் நடக்கும் சுவாரசியமான கதையாக இந்த சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி ஒரு சில நாட்களிலே யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய சாதனையை படைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலில் டிஆர்பி அளவு 8.34 ஆக இருக்கிறது.

செம்பருத்தி கதாநாயகன்
அதே நேரத்தில் ஜீ தமிழில் 9 மணி சீரியலாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல்
பெரிய அளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது . காரணம் செம்பருத்தி சீரியலில் கதாநாயகன் கார்த்தி மீண்டும் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். செம்பருத்தி சீரியலில் இவர் கதாநாயகனாக இருந்த வரைக்கும் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால் இவர் இந்த சீரியலை விட்டு விலகிய பிறகு அந்த சீரியல் அதிகமாக பின்தங்கி விட்டது. அதனால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் சில வருடங்களுக்கு பிறகு நடிக்க வைத்திருக்கின்றனர்.

டிஆர்பி யில் ஏற்பட்ட சரிவு
இந்த நிலையில் கார்த்திக் நடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல் நகர்ப்புறங்களில் மட்டுமே டி ஆர் பியில்3. 46 என்ற அளவில் இருந்து வருகிறது .ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்குள் டிஆர்பி யில் இந்த அளவிற்கு மாற்றம் இருக்கும் என்பதை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக கார்த்திக் ரசிகர்களுக்கு இருந்த செய்தி அதிர்ச்சியாக தான் இருந்து வருகிறது . இதனாலே இந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பப்படுமா? என்று ஒரு சிலர் கேள்வி எழுப்ப, இப்பதானே தொடங்கி இருக்கிறது. இன்னும் அதில் உள்ள நடிகர்கள் பலர் அறிமுகமாகவே இல்லை. இந்த நிலையில் கதை போக தான் சூடு பிடிக்கும் என்று இந்த சீரியலின் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications