மேடையிலே கண்கலங்கி அழுத அஸ்வின், தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிய கமல் .. தழுதழுத்த வார்த்தைகள்!
சென்னை: நடிகர் அஸ்வின் குமார் தான் புதியதாக நடித்து வரும் செம்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையிலே கண்கலங்கி இருக்கிறார்.
அருகில் இருந்த கமல்ஹாசன் அஸ்வின் குமாருக்கு முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
கடந்த முறை மேடையில் ஏற்பட்ட கசப்பான நினைவுகள் காரணமாக அஸ்வின் இந்த முறை கவனமாக வார்த்தைகளை பேசி இருக்கிறார்.

நினைவுபடுத்தி கலாய்க்கும் நெட்டிசன்கள்
பிரபு சாலமன் அஸ்வின் கூட்டணியில் உருவாகி இருக்கும் செம்பி திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் உருக்கமுடன் பேசி இருக்கிறார். ஏற்கனவே இவர் முதல் திரைப்படம் ஆன என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தில் இவர் எதார்த்தமாக பேசிய வார்த்தைகள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மீது நெகடிவ் கருத்துக்களை அனைவருக்கும் ஏற்படுத்தும் விதமாக பல மீம்ஸ்கள் உருவாகிவிட்டது. நெட்டிசன்கள் இப்ப வரைக்கும் இவர் என்ன சொல்லப் போகிறாய் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசியதை நினைவுபடுத்தி கலாய்த்து வருகின்றனர்.

இது புது திரைப்படம்
இந்த நிலையில் தற்போது அஸ்வின் குமார், பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை Trident Art நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை ,திண்டுக்கல், கொடைக்கானலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகை கோவை சரளா, தம்பி ராமையா போன்ற பலரும் நடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.அதில் முக்கியமாக கேரக்டரில் கோவை சரளா 90 வயது பாட்டியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

அஸ்வின் கூறிய நெகிழ்ச்சியான வார்த்தைகள்
தம்பி ராமையா திரைப்படத்தில் பஸ் கண்டக்டர் ஆக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .அதுபோல இந்த திரைப்படம் முழுக்க பஸ்ஸில் படமாக்கப்பட இருக்கிறதாம். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்று இருக்கிறது. பிரபு சாலமன் முந்தைய படங்களைப் போலவே இயற்கை அழகு சார்ந்த கதையாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது கமல் முன்னிலையில் மேடையில் பேசிய அஸ்வின் பிரபு சாலமன் சாரை நான் சந்தித்தபோது இந்த படத்தில் என்னை நடிக்க வைப்பது உங்களுக்கு ஓகேவா சார் என்றேன். ஏனென்றால் இந்த படத்தின் சூட்டிங் செல்லும்போது என்னுடைய பயணம் மிகவும் மோசமாக இருந்தது என்று தழுதழுத்தக் குரலில் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

கமல் கொடுத்த ஆதரவு
அஸ்வினைத் தொடர்ந்து பேசிய கமல் அஸ்வினை மேடைக்கு அழைத்து உங்களை பிடித்ததால் தான் இயக்குனர் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இது உங்களுக்கு பெரிய வாய்ப்பு என்று அஸ்வினுக்கு தோளில் தட்டி கொடுத்து ஆறுதல் தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு காத்திருந்த அஸ்வின் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் அவர் எதிர்பார்த்த அளவில் இவருக்கு திரை பயணம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. அந்த நிலையில் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் ரசிகர்களை பெற்று கொடுத்து. இவருடைய முகத்தை பலருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது ,இந்த நிலையில் அஸ்வின் நடித்த முதல் திரைப்படம் வெற்றி அடையா விட்டாலும் இரண்டாவது படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications