Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடைசி நேரத்தில் விக்ரமனுக்கு "லக்கி” கொடுக்க காரணம்.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய மணிகண்டன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிகண்டன் அந்த நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகளை பற்றி பேசியிருக்கிறார்.

கடைசி நேரத்தில் தான் வைத்திருந்த லக்கி செயினை விக்ரமனுக்கு கொடுத்த காரணத்தை பற்றி பேசியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்த விக்ரமன் பற்றி வெளியே வந்த பிறகு மணிகண்டன் கருத்தை கூறியிருக்கிறார்.

வருத்தமாகத்தான் இருக்கிறது

வருத்தமாகத்தான் இருக்கிறது

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் மணிகண்டன் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் இதுவரைக்கும் யாரும் செய்யாத சாதனையை மணிகண்டன் இந்த ஆறாவது சீசனில் செய்து காட்டியிருந்தார். முதல் முறையாக நான்கு முறை தலைவர் பதவியில் அமர்ந்து மணிகண்டன் சாதனை செய்திருந்தாலும், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் .இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக தான் இருந்தது. ஆனாலும் நான் கடைசி வரைக்கும் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அது நடக்காதது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. அதுவும் தற்போது நடந்து வரும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் தான் இல்லையே என்பதுதான் வருத்தம்

அந்த டாஸ்க் விளையாட ஆசை

அந்த டாஸ்க் விளையாட ஆசை

ஏற்கனவே ரசிகர்களும் டிக்கெட் 2 பினாலே டாஸ்க்கில் மணிகண்டன் இல்லையே என்று தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து பிசிகல் டாஸ்க் அதிகமான முறை மணிகண்டன் தான் ஜெயித்திருக்கிறார். அதனால் இந்த டாஸ்க்கில் மணிகண்டன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் ஜெயித்து பைனலுக்கு சென்றிருப்பார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் மணிகண்டன் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தாலும் தன்னால் இந்த விளையாட்டை விளையாடாமல் இருக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார். தன்னுடைய வீட்டிலேயே இவர்கள் செய்யும் டாஸ்க்களை செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என்னுடைய அம்மாவின் உடல்நிலை இப்போது சரியில்லை அதனால் நான் அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன் என்று கூறியிருக்கிறார்.

 டாஸ்க்கில் ஏற்பட்ட பஞ்சாயத்து

டாஸ்க்கில் ஏற்பட்ட பஞ்சாயத்து

பிக் பாஸ் வீட்டிற்குள் நான் டாஸ்க் விஷயத்தில் சரியாக விளையாடிக் கொண்டிருந்தாலும் என்னைப்போல விளையாடும் ஒரு போட்டியாளராக தனலட்சுமி இருந்து வந்தார். என்னோடு பொம்மை டாக்கில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை இட்டாலும் தனலட்சுமியின் விளையாட்டு வெறித்தனமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். அதுபோல விக்ரமனோடு தனக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிகமான கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொண்டிருந்தது. அதுவும் குறிப்பாக பொம்மை டாஸ்க் பிறகுதான் எனக்கும் விக்ரமனுக்கும் செட் ஆகவில்லை.

நட்பு தொடர வேண்டும்

நட்பு தொடர வேண்டும்

என்னதான் எனக்கு விக்ரமன் மீது கோபம் இருந்தாலும் அவருடைய கேரக்டர் ரொம்பவே பிடிக்கும். அவர் வெளியே எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது. உள்ளே சரியாகத்தான் இருந்து வந்தார். அதனாலே தான் அவருக்கு நான் என்னுடைய லக்கி செயினை கொடுத்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அவருடன் என்னுடைய நட்பு தொடரும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். அவர் எதிலும் சரியாக இருப்பதால் கண்டிப்பாக அவருடன் எனக்கு நட்பு தொடரும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+