மகனைப் பற்றி உருக்கமாக பதிவிட்ட ஆரவ்.. குவியும் ஆசீர்வாதங்கள் எல்லாத்துக்கும் காரணம் "இவர்தானாம்"
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஆரவ் தன்னுடைய மகனை பற்றி வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் பல்வேறு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்று வருகிறது.
நடிகர் ஆரவ் தன்னுடைய மகனின் பிறந்த நாளுக்கு புகைப்படங்களை பதிவிட்டு வித்தியாசமாக வாழ்த்துக்களை கூறி இருக்கிறார்.

எதிர்பார்க்காத வில்லன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 1 வெற்றியாளராக வெற்றி பெற்ற ஆரவ் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது சமீபத்தில் வெளியான கலகத்தலைவன் திரைப்படத்தில் பலரும் பாராட்டும் வில்லனாக புது அவதாரம் எடுத்திருக்கிறார். இவருடைய இந்த திரைப்படம் இவர் எதிர்பார்த்தபடியே அதிக அளவில் இவரை பாப்புலர் ஆக்கிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது இவருக்கு மீண்டும் பெரிய அளவில் வெற்றி கிடைத்து இருக்கிறது. இந்த நேரத்தில் தன்னுடைய மகனின் முதல் பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார்.

மீண்டும் வந்த அப்பா
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரவ் ராஹே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருனுடன் ஜோஸ்வா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தான். ஒரு மாடலிங் பெண்ணாக இருந்து இந்த திரைப்படத்தின் மூலமாக ஒரு நடிகையாக அறிமுகமான இவரைத்தான் ஆரவ் திருமணம் செய்து இருக்கிறாராம். கடந்த வருடம் ஆரம் தனக்கு ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து தனக்கு தன்னுடைய அப்பா மீண்டும் வந்து விட்டார் என்று நெகிழ்ச்சியாக கூறி இருந்தார். தன்னுடைய மகனை தன்னுடைய அப்பாவாகத்தான் இவர் பார்த்து வருகிறாராம். பாசத்தில் தன்னுடைய மகனை இவர் கொஞ்சுவதை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். அதை பார்த்து பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொகுப்பாளராக திணறல்
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையோடு இருந்த ஆரவ் முதல்முறையாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பிற்காக தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஒரு சிறிய ஒரு சேனலில் இவர் ஒரு நாள் எபிசோடு மட்டும் தொகுப்பாளராக இருந்திருக்கிறார். கல்லூரி படிக்கும் போது இவருடைய நண்பர் அந்த எபிசோடை காலேஜில் அனைவரும் முன்னிலையிலும் போட்டு காட்டி இவருடைய திணறல்களை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாராம். அதற்குப் பிறகு இனி இந்த முறை தேவையில்லை என்று இவர் மாடலிங் மூலமாக சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நெகிழ்ச்சியான வாழ்த்துக்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மற்றும் ஓவியாவின் ஆர்மிகள் சமூக வலைத்தளத்தில் அதிகமான ஆதரவு கொடுத்து வந்தனர். ஓவியா இவரோடு பழகி வந்ததை பலரும் இவர்கள் இருவரும் வெளியே வந்த பிறகும் காதலித்து வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இருவருமே அவர்களுடைய பாதையை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டனர். தற்போது திருமண வாழ்க்கையில் இருக்கும் ஆரவ் சினிமாவிலும் தன்னுடைய புது பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதில் அவருக்கு கிடைத்த வெற்றி ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில், தன்னுடைய மகனின் பிறந்த நாளுக்கு அவர் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். அதில், "எங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்த என்னுடைய மகனுக்கு பிறந்தநாள்.. எங்களுடைய அதிர்ஷ்டத்திற்கு வசீகரமாக இருப்பதற்கு நன்றி, நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம். உன்னுடைய தாத்தா உனக்கு சிறந்ததை மட்டுமே தருவார் என்று நான் உறுதியாக கூறுகிறேன்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் பலரும் வாழ்த்துக்களையும் குழந்தைக்கு ஆசீர்வாதங்களையும் கூறி வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications