For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபல சீரியலை சூசகமாக கலாய்த்த எதிர்நீச்சல் இயக்குனர்..நெட்டிசன்களின் கருத்தை அப்படியே கூறிவிட்டாரே

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலின் இயக்குனர் தான் மற்ற சீரியல்களின் கதையைப் போல தனித்து இல்லாமல் தனித்துவமாக இருப்பதற்கு காரணத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.

சில சீரியல்களில் கதையை நகர்த்த வேண்டும் என்று சம்பந்தமே இல்லாத கதையை எடுத்து வருவதாக அதனால் தான் ரசிகர்கள் அதை வெறுக்கின்றனர் என்று கூறி இருக்கிறார்.

வீட்டில் நடக்காத விஷயங்களை சீரியலில் காட்டுகின்றனர். சிலர் கடத்தல் சீன்களை அதிகமாக காட்டுகின்றனர் என திருச்செல்வம் ரோஜா சீரியலை மறைமுகமாக கலாய்திருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியலில் இயக்குனர் அந்த சீரியலில் வெற்றிக்கு என்ன காரணம் என்று முதல்முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார் அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மெல்ல மெல்ல உயரும் கொரோனா.. இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போடப்படுமா? எய்ம்ஸ் EX இயக்குனர் பதில் மெல்ல மெல்ல உயரும் கொரோனா.. இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போடப்படுமா? எய்ம்ஸ் EX இயக்குனர் பதில்

பெண்களுக்கு முக்கியத்துவம்

பெண்களுக்கு முக்கியத்துவம்


எதிர்நீச்சல் சீரியல் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் அடிமைப்படுத்தி வைக்கும் அடக்கு முறையை பற்றிய ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் பெண்கள் தங்களுடைய உரிமைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகளைப் பற்றியதாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதனாலேயே இந்த சீரியல் டி ஆர் பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. சீரியலில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். அனைவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக இந்த சீரியலின் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

பிற்போக்கு கருத்துக்கு பதில்

பிற்போக்கு கருத்துக்கு பதில்

இந்த நிலையில் இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் பல வருடங்களுக்கு பிறகு தான் இந்த சீரியலை இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் இப்ப வரைக்கும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மெட்டி ஒலி சீரியல் இவர் இயக்கியிருந்தாலும் கோலங்கள் நடித்தும் இருப்பார். அதனாலேயே இவரை பலரும் தொல்காப்பியன் என்றும் தொல்ஸ் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாவதற்கு முன்பே சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் இந்த சீரியலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. ஆரம்பத்தில் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தை வைத்து ஒரு சில நெகட்டிவ் கருத்துக்கள் வந்தது. காரணம் பெண் அடிமை தனமாக இவர் இருக்கிறார். என்றும் பெண்கள் விஷயத்தில் இன்னும் பிற்போக்குத்தனமாக செயல்படுகிறார் என்றும் கருத்துக்கள் எழுந்தது. ஆனால் அதைக் குறித்து தற்போது இயக்குனர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இளைஞர்களின் பாராட்டு

இளைஞர்களின் பாராட்டு

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பிற்போக்குத்தனமாக நடந்து கொள்வதற்கு காரணம் அவர் அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் வளர்ந்து இருக்கிறார். ஆனால் இந்த மாதிரி இன்னும் பலருடைய வீட்டில் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் எப்படி தாண்டி பெண்கள் தங்களுடைய உரிமைகளையும் சுயமரியாதையும் காப்பாற்றி கொள்ள இருக்கின்றனர் என்பது தான் இந்த சீரியலின் கதையாக இருந்து வருகிறது. இந்த சீரியலை பெரியவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் பாராட்ட தொடங்கி விட்டனர். குறிப்பாக நான் திருமண பங்ஷனுக்கு சென்றிருக்கும் நேரத்தில் கூட பல கல்லூரி மாணவர்கள் தன்னிடம் இந்த சீரியலில் கருத்து நன்றாக இருக்கிறது இப்போதைய சூழ்நிலைக்கு தேவையானது என்று பாராட்டியதாக கூறியிருக்கிறார்.

கடத்தல் சீன்களுக்கு குட்டு

கடத்தல் சீன்களுக்கு குட்டு

அது மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களால் கிரைஞ்ட் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மாதிரி சீரியல் நான் எப்போதும் பாராட்டவே மாட்டேன். குறிப்பாக என் வீட்டு பெண்களை கடத்துவது போன்று நான் சீரியல் கதை வைக்க மாட்டேன். கதையின் சுவாரசியத்திற்காக அடிக்கடி கடத்தல் நாடகத்தையே போட்டுக் கொண்டிருந்தால் ரசிகர்களுக்கு போர் அடிக்கத்தான் செய்யும். அவர்கள் அதை திட்ட தான் செய்வார்கள். பொதுவாக சன் டிவியில் இரவு நேர சீரியல்கள் என்றால் அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் அதில் பார்க்கும் நிலைமையில் தான் இருப்பார்கள். பிடிக்குதோ பிடிக்கலையோ அந்த இடத்தில் பார்த்தாக வேண்டும் என்று தள்ளப்படுவார்கள் அப்போது ரசிகர்களை கவரும் விதத்தில் சீரியல் இருந்தால் அது நல்லது என்று கூறி இருக்கிறார்.

மறைமுக கருத்து இதுக்கு தானா

மறைமுக கருத்து இதுக்கு தானா

இந்த நிலையில் திருச்செல்வம் பேசியது சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலை தான் திருச்செல்வன் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அந்த சீரியல் தான் வாரத்திற்கு நான்கு முறை ரோஜாவை கடத்தி விடுவார்கள். அர்ஜுன் சார் தேடி கண்டுபிடிப்பார். இப்படியே தான் அந்த சீரியஸ் சென்று கொண்டிருந்தது. அதனால் அந்த சீரியலை தான் கலாய்க்கிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தாங்கள் மனதில் நினைத்ததை எல்லாம் இப்படி இயக்குனர் புட்டு புட்டு வைத்து விட்டார் என்று அவருக்கு பாராட்டியும் வருகின்றனர்.

English summary
The director of the serial Ethirneechal, which is being aired on Sun TV, has told about the reason why the story of the serial is unique and not unique like other serials. In some serials, fans hate it because they take unrelated stories to move the story. They show things that do not happen at home in the serials. Fans opined that Thiruchelvam has indirectly mixed the Roja serial as some show too many kidnapping scenes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X