"தம்பி எங்க மடி கிடைச்சாலும் போய் சாஞ்சிக்கிற”... பிக் பாஸ் அசல் கோலாரை கலாய்த்த திருச்சி சாதனா
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் அசல் கோலார் பற்றி டிக் டாக் பிரபலமான திருச்சி சாதனா பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் அசல் கோலார் பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருக்கும்போது, திருச்சி சாதனா பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாட செல்லச் சொன்னால் அங்கே தம்பி அசல் கோலார் அனைவரையும் தடவிக் கொண்டிருக்கிறார் என்று பங்கமாக கலாய்த்து கொண்டிருக்கிறார்.

சர்ச்சையில் சிக்கிய போட்டியாளர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் அனைத்து தரப்பட்ட மக்களும் அதனை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பலதரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் காணா பாடகராக அறிமுகமாகி இருக்கும் அசல் கோலார் ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொண்டிருக்கிறார். அவரைக் குறித்து சேனல் தரப்பில் இருந்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக வலைத்தளத்தின் அவரைப் பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் .

அதிகரிக்கும் மீம்ஸ்கள்
அசல் கோலார் சக பெண் போட்டியாளர்களிடம் எப்போதும் தடவிக் கொண்டும் உரசிக்கொண்டும் கடித்து கொண்டும் சில்மிஷம் தனத்தில் ஈடுபட்டு கொண்டு வருவதாக அவரை பற்றி பல குற்றச்சாட்டுகளும், அவர் வீடியோக்களும் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களில் அசல் கோலார் பற்றி அதிகமான மீம்ஸ்கள் இடம் பெற்று வருகிறது. அதில் இவர் பெண் போட்டியாளர்களில் மடியில் படுத்த படி கொஞ்சிக் கொண்டும் இருப்பது தவறாமல் இடம்பிடித்து வருகிறது.

சாதனா கொடுத்த வார்னிங்
பிக் பாஸ் ஆறாவது சீசனில் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து மற்றும் தனலட்சுமி இருவர் கலந்து கொண்டிருந்தனர். அதில் ஜி.பி. முத்து வெளியேறிய விட்ட நேரத்தில் தனலட்சுமி மட்டும் இன்னமும் உள்ளே இருக்கிறார். இந்த நிலையில் அசல் கோலார் பற்றி டிக் டாக் பிரபலமான திருச்சி சாதனா பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். அதில் , "ஏ....பிக் பாஸ் அசல் கோலாரு நல்லா தடவுரியப்பா பொம்பள பிள்ளைகளை... எங்க மடி கிடைச்சாலும் உடனே சாய்ந்துக்கிற. .. ஏ...அசல் கோலாரு நீ கோலாறான ஆளுன்னு அந்த பிள்ளைகளுக்கு தெரியலையே தம்பி பயலே, ரொம்ப பண்றடா... நீ அங்க பிக் பாஸ்க்கு கேம் விளையாட போயிருக்க, நீ யாருன்னு அங்க காட்டுறதுக்கு போய் இருக்க, ஆனா நீ யாருன்னு முழுசா காட்டிடுவா போலடா கோலாரு.. பார்த்து விளையாடு "என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

என்ன ஒரு தத்துவம்
திருச்சி சாதனாவிற்கு சமூக வலைத்தளத்தில் இருதரப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு சிலர் அவருடைய வீடியோவை ஆதரிக்கும் போது, இன்னொரு தரப்பினர் அவருடைய வீடியோ ஆபாசமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரே அசல் கோலார் பற்றி இவ்வளவு பேசிட்டு இருக்கிறார் .என்றால் அசல் கோலாரின் நிலைமை என்னவாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள் என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர். இன்னும் சிலர் இதுதான் "கரடியே காரி துப்பிய முமண்டம்" என்று பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications