திரிஷா விஜய்க்கு செய்வது தப்பு! நடிகை அம்பிகா ஓபனாக சொன்ன வார்த்தை.. பாராட்டும் முதல்வர் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்- திரிஷா தொடர்பான பேச்சுக்கள் மீண்டும் சோசியல் மீடியாவில் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் நடிகை அம்பிகா ஆரம்பத்தில் லண்டன் சென்றிருந்த திரிஷாவுக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தாலும், இப்போ திரிஷா இடத்தில் நான் இருந்தால் இதை செய்ய மாட்டேன் என்று விஜய் ரசிகர்கள் மனதை குளிர வைப்பது போல பேசி இருக்கிறார். அதைக் கேட்டதும் நெட்டிசன்கள் நாங்களும் இதைத்தானே எதிர்பார்க்கிறோம் என்று இந்த வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கும் அன்பு திரிஷா லண்டனில் இருந்த வீடியோ வெளியான போது, அவர் எங்கே போயிருக்கிறார்? யாருடன் இருக்கிறார்? என்பதை எல்லாம் வைத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அப்போது அதற்கு நடிகை அம்பிகா பதிலடி கொடுத்திருந்தார். திரிஷா லண்டனில் இருந்தா என்ன? சீனாவில் இருந்தா என்ன? ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அது நமக்கு பிரச்சனை இல்லை என்று அவர் சொல்லி இருந்தார்.

நடிகை அம்பிகா பேட்டி

இதை சேகுவேரா கடுமையாக பேசியிருந்தார். திருஷாவுக்காக அம்பிகா எதற்காக பேசுகிறார்? அந்த காலத்து திரிஷா தான் அம்பிகா, அதனால் தான் அவர் சப்போர்ட் பண்ணுகிறார். அவருக்கு எம்ஜிஆர் 25 ஏக்கர் நிலம் கொடுத்திருந்தார் அதைப்பற்றி அம்பிகா பேசுவாரா? அவங்க முதுகில் இருக்கிற அழுக்கை கழுவாமல் மத்தவங்களை பற்றி பேசக்கூடாது என்று விமர்சித்திருந்தார்.

Ambika Trisha Vijay

நடிகை அம்பிகாவின் பதிலடி

இதனால் கடுப்பான அம்பிகா இப்போ ஒரு பேட்டியில் மொத்த சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது, என்னைப் பற்றி ஒரு அண்ணன் சேகுவேரா பேசியிருந்தாரே அந்த பேட்டியை நான் பார்த்தேன். அதில் 25 ஏக்கர் எம்ஜிஆர் இடமிருந்து எழுதி வாங்கியது பத்தலையா ?நீங்க ஏன் திரிஷாவுக்கு ஆதரவா பேசுறீங்கன்னு கேட்கிறாரு. நான் அந்த காலத்து திரிஷா.. அதனாலதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்லி இருக்கிறார்.

மோசமான குற்றச்சாட்டு

இப்போ எனக்கு இரண்டு விஷயம் தெரிய வேண்டும். நான் அந்த காலத்து திரிஷா என்றால், அந்த காலத்து விஜய் யார்? என்பது எனக்கு தெரிய வேண்டும். அதை சேகுவேரே சொல்ல வேண்டும். மற்றொரு கேள்வி எனக்கு 25 ஏக்கர் எம்ஜிஆர் கொடுக்கும்போது இவர்தான் வில்லேஜ் ஆபிஸராக இருந்தாரா? அந்த டாக்குமெண்ட் உங்களிடம் தானே இருக்கு? அதை என்னிடம் கொண்டு வந்து கொடுங்க, அதை விற்று விட்டு உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை நான் தரேன் என்று அம்பிகா சீரியஸான குற்றச்சாட்டுகளுக்கு கொஞ்சம் காமெடியோடு பதிலடி கொடுத்து இருப்பது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இதோடு விஜய் அம்மா பற்றி சேகுவேரா பேசிய வீடியோவுக்கும் அம்பிகா பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு குழந்தையை பெற்றதற்கு பதிலாக அபார்ஷன் செய்து இருக்கலாம் என்று அவர் பேசி இருக்கிறார். அந்த வீடியோவை நான் பார்த்தேன். ஆனால் அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார்கள். எதற்கு சேகுவேரே இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்? இதுபோன்ற பேச்சுக்கள் சேகுவேரிடம் மட்டுமல்ல தமிழா தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன், காந்தராஜ் உள்ளிட்ட சிலரும் தரக்குறைவாக பேசுகிறார்கள் என்று அம்பிகா ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

விஜய் அம்மா பற்றிய பேச்சு

அதோடு இப்படி மிக அவதூறாக பேசுபவர்கள் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேடையில் எப்படி அரசியல்வாதிகள் அசிங்கமாக கெட்ட வார்த்தையில் பேசுகிறார்களோ, அதைவிட மோசமாக அவமானப்படுத்தும் வகையில் அசிங்கமாகவும் தரக்குறைவாகவும் இவர்கள் பேசுகிறார்கள். இவர்களுக்கு என்ன தைரியம் தெரியுமா? நாங்கள் மீடியாவில் இருக்கிறோம் என்ன வேணாலும் பேசுவோம் என்று நினைக்கிறார்கள்.

தயவு செய்து அவர்களின் குடும்பத்தினர் இது மாதிரி பேசக்கூடாது என்று எடுத்து சொல்லுங்க என்று ஆதங்கத்துடன் அம்பிகா வேண்டுகோள் வைத்திருக்கிறார். கடைசியாக திரிஷா பற்றி பேசும்போது திரிஷா அவருடைய நண்பருடன் வெளியே செல்கிறார். ஒருவேளை இருவருக்கும் நட்பு இருக்கிறது, அதை நாங்கள் எவ்வளவு விமர்சனம் வந்தாலும் வெளியே காட்டுவோம் என்று இருவரும் நினைக்கலாம்.

திரிஷா இடத்தில்

ஆனால் விஜய் இப்போது ஒரு பதவியில் இருக்கிறார். அவருக்கு நம்முடைய உறவால் ஒரு அவப்பெயர் வந்து கொண்டிருக்கிறது என்றால் நான் திரிஷா இடத்தில் இருந்தால் கண்டிப்பாக விஜய்க்கு மேலும் தர்ம சங்கடமாக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன். ஒதுங்கிக் கொள்வேன் என்று அம்பிகா பேசியதுதான் இப்போ விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் இருக்கிறதாம். உடனே ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து நாங்க மனசுல நினைச்சதை நீங்க அப்படியே சொல்லிட்டீங்க மேடம், இது திரிஷா கண்ணில் பட வேண்டும் என்று கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+