தன்னுடைய குடும்ப வேலை இதுதான்.. பாடகியாக ஆகவில்லை என்றால்? மனம் திறந்த ராஜ லக்ஷ்மி
சென்னை: பாடகி ராஜலட்சுமி தான் பாடகி ஆகவில்லை என்றால் ஒரு தமிழ் ஆசிரியராக ஆகிருப்பேன் என்று தன்னுடைய கனவை குறித்து கூறியிருக்கிறார்.
ராஜலட்சுமியின் குடும்ப தொழில் தறி நெய்வது தானாம். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பாடகியாக மாறிய கடின சூழலை பற்றி பேசி இருக்கிறார்.
தற்போது பாடகியாகவும், நடிகையாகவும் தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய சிறுவயது கனவு நிறைவேறவில்லை என்று ஏக்கத்தோடு கூறி இருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்த ராஜலட்சுமி ஆரம்பத்தில் இருந்தே அவருடைய கணவருடன் மக்கள் இசை பாடகியாக திருவிழாக்கள் கிராம பங்க்ஷன்களில் கலந்து கொண்டு குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பிரபலமாக இருந்திருந்தார். ஆனாலும் முதல் முறையாக அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தற்போது திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை பாடி கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இவருடைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு இவருடைய விடாமுயற்சியும் காரணம்.

ஆசிரியர்தான் லட்சியம்
இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய பேட்டியில் இவர் தான் பாடகியாக வரவில்லை என்றால் என்ன மாதிரி ஆகி இருப்பீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில் தனக்கு சிறுவயதில் இருந்து ஆசிரியராக ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. அதுவும் தமிழ் ஆசிரியர் என்பது எனக்கு ரொம்பவே பிடித்தது. கெத்தாக பாடம் நடத்துவது எனக்கு பிடித்தது ஆனால் பாடகியாக மாறியதும் அந்த கனவு நிறைவேறவில்லை. ஆனால் அதற்கான படிப்புகளை நான் படித்து முடித்து இருக்கிறேன் .வாய்ப்பு தான் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

குலத்தொழில்
அது மட்டுமல்லாமல் ராஜலட்சுமி யின் குலதொழில் தறி நெய்வது தானாம் அவருடைய அப்பாவும் தறி நெய்ந்து கொண்டு இருந்தவர் தானாம். அதனால் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தறி நெய்பவர்களின் வலிகளை சொல்லும் விதமாக பாடல்களை பாடி இருந்தார். அந்த பாடல்கள் பல இடங்களில் ஒலித்து இருந்தாலும் இவருடைய சொந்த ஊரில் ஒரு பஜனை நடக்கும் இடத்தில் இவர் பாடி இவருடைய ஊர்காரர்கள் அனைவரும் கண்கலங்கி கதறி அழுதது இப்ப வரைக்கும் தன்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று கூறி இருக்கிறார். குடும்பத் தொழில் தறி நெய்வதாக இருந்தாலும் அதில் எவ்வளவோ கஷ்டங்களை தாண்டி தான் இந்த நிலைமைக்கு வந்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

முயற்சிகள் தொடர வேண்டும்
அதனாலேயே மக்கள் இசை பாடகர்கள் பலர் தங்களுக்கு திறமை இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சோர்ந்து போய்விட கூடாது நமக்கு வாய்ப்பு எப்ப வேணாலும் கிடைக்கும் அதற்கான முயற்சிகளை மட்டும் கைவிட்டு விடாமல் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். திடீரென்று அது கிளிக் ஆகி விடும் நம்மளுடைய வாழ்க்கையும் மாறிவிடும் அதற்கான போராட்டங்கள் தளர்ந்து விட்டால் எல்லாமே முடிந்து விடும். அதனால் எப்போதும் நம்முடைய திறமையையும் வளர்த்துக் கொண்டே முயற்சியை விடாமல் இருந்து வைக்க வேண்டும் என்று தன்னைப்போல கஷ்டப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் பாடகர்களுக்கும் இவர் அறிவுரை கூறியிருக்கிறார். இவர் தற்போது லைசென்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியானதும் இவருடைய ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவருடைய வெளியே தெரியாத கனவுகள் ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்திருக்கிறது.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications