அடி தாங்க முடியலமா..வலைத்தளத்தில் பரவி வரும் டான்சர் ரமேஷ் உயிரோடுஇருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ
டான்சர் ரமேஷ் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இரண்டாவது மனைவி அடித்ததால் வலி தாங்க முடியவில்லை என்று வீட்டில் இருப்பவர்களோடு தகராறு செய்து கொண்
சென்னை: ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த டான்ஸர் ரமேஷ் சமீபத்தில் மரணம் அடைந்திருக்கிறார்.
அவருடைய மரணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவில் மது போதையில் டான்ஸர் ரமேஷ் தன்னுடைய மனைவி தன்னை அடித்து விட்டதாகவும் அதனால் தான் செத்து விடலாமா என்று கையில் டேபிள் பேனை உடைத்து வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

மார்க்கெட்டில் நடனம்
டான்சர் ரமேஷ் 50 வயதான நிலையில் சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் சாலை ஓர கடைகளில் தினக்கூலி வேலை பார்த்து வந்திருக்கிறார். வேலைகளுக்கு நடுவே பாடல் சத்தம் கேட்டதும் அந்த பாடல்களுக்கு ஏற்றவாறு டான்ஸ் ஆடி அங்கிருப்பவர்களை மிரள வைத்திருக்கிறார். இவருடைய டான்ஸை பார்த்து கடைக்கு வரும் பலர் இவரை பாராட்டி இருக்கின்றனர். அப்போது அவர் இருக்கும் பகுதியை சார்ந்த சிறுவர்கள் அவரை டான்ஸர் ரமேஷ் என்று அழைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று 20 வருடமாக போராடிக் கொண்டிருந்திருக்கிறார். பிரபுதேவாவின் நடன அசைவுகளை அச்சு அசலாக நடனமாடக்கூடிய ரமேஷ் தன்னுடைய தம்பி மற்றும் நண்பர்களின் உதவியால் தான் ஆடும் டான்ஸ் வீடியோவாக வெளியிட தொடங்கி இருக்கிறார்.

மகள்கள் செய்த உதவி
ஆரம்பத்தில் அவருடைய டிக் டாக் வீடியோ பிரபலமாக தொடங்கியதும் அவருக்கு ஜீ தமிழில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அப்போது அவருக்கு அங்கே செல்வதற்கு கூட காசு இல்லாமல் தான் இருந்ததாம். அவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றார்களாம். அவர்கள் பிரபல ஜவுளி கடையில் வேலை செய்து வரும் நிலையில் நாங்கள் வீட்டை பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் உங்கள் திறமையை காட்டுங்க என்று அவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியில் இவர் பாபா மாஸ்டரை காப்பியடித்து டான்ஸ் ஆடி கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவருடைய டான்ஸ் முன்பு பல இளம் டான்ஸர்கள் கூட தோற்றுப் போய் இருக்கின்றனர். அந்த அளவிற்கு தனக்கு இருக்கும் திறமையால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

வளர்ந்து வரும் நிலையில் ஏமாற்றம்
ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் டான்சர் ரமேஷுக்கு அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் டான்சர் ரமேஷ் நடித்திருக்கிறாராம். இந்த நிலையில் இவர் தனது பிறந்தநாளில் புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்புக்கு சென்ற டான்ஸர் ரமேஷ் அதற்கு குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டு திருமணங்கள்
ஏற்கனவே டான்சர் ரமேஷ் காதலித்து முதல் மனைவியை திருமணம் செய்து அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்து வேறு பெண்ணோடு சென்றுவிட்டார் என்று முதல் மனைவி பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில், அடிக்கடி இரண்டாவது மனைவியின் வீட்டு தான் டான்சர் ரமேஷ் இருந்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது இரண்டாவது மனைவி டான்சர் ரமேஷனை அடித்து இருப்பதாகவும் முதல் மனைவி பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

லேட்டஸ்ட் வீடியோ
இந்த நிலையில் டான்சர் ரமேஷ் இறப்பதற்கு முன்பு இரண்டாவது மனைவியோடு தகராறு ஏற்பட்டு அதனால் தான் இறந்துவிட்டார் என்ற செய்திகள் பரவி வருகிறது. இதைக் குறித்து உறுதியான தகவல்கள் இன்னும் எதுவும் வெளியே தெரியாத நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் டான்ஸர் ரமேஷ் தன்னை இரண்டாவது மனைவி அடித்து விட்டதாகவும் குடிப்பதற்கு தனக்கு பணம் இல்லை என்றும், தன்னை வேலைக்கு செல்ல கூறுகிறார்கள். நான் எப்படி வேலைக்கு போவேன் என்று கூறியபடியே அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். கையில் டேபிள் பேனை உடைத்து வைத்துக்கொண்டு வீட்டில் இருப்பவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் அடிக்கடி தான் செத்து விடலாமா? செத்து விடலாமா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் அவருடைய இரண்டாவது மனைவி கையில் உருட்டு கட்டையோடு இருப்பதும் பதிவாகி இருக்கிறது. இது சமீபத்தில் எடுத்த வீடியோ தானா? அல்லது இதற்கு முன்பு இவர்கள் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையின் போது எடுக்கப்பட்ட வீடியோவா என்று உறுதியாக தெரியாவிட்டாலும் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications