என்னோட ஓட்டு இந்த போட்டியாளருக்கு தான்.. ரட்சிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு.. காரணம் அதுதானோ?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதாவின் கணவர் தான் யாருக்கு ஓட்டு போட்டார் என்று முதல்முறையாக பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
ரட்சிதாவுக்கு ஆரம்பம் முதலே ஆதரவு கொடுத்து வந்த அவருடைய கணவர் தினேஷ் முதல்முறையாக வேறு போட்டியாளருக்கு ஓட்டு போட்டு அந்த ஸ்கிரீன்ஷாட்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

பலதரப்பட்ட வரவேற்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் பலர் பார்த்து வருவதை பல்வேறு சமயங்களில் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளை பிரபலங்களும் கவனித்து அதைப் பற்றி பேசி வருகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு பெற்றிருக்கின்றது.

மகிழ்ச்சி தான்
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருக்கும் ரட்சிதாவின் கணவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து அவருடைய மனைவியை குறித்தும் டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு சிலருக்கு தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .அதன் மூலமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரே இடத்தை பிடிப்பதற்காக பலரும் போட்டி போட்டு வருகின்றனர். அதில் ரட்சிதாவுக்கு தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி தான். ஆனால் உள்ளே நடக்கும் சில நிகழ்வுகள் தனக்கு மனக்கசப்பு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

வெறுப்பை ஏற்படுத்தும் ராபர்ட் மாஸ்டர் செயல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமானதிலிருந்து ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் பழகி வருவது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ரட்சிதாவின் குடும்பத்தினருக்கும் முகசூழிப்பை ஏற்படுத்தும் விதமாக தான் இருந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் நாளுக்கு நாள் ராபர்ட் மாஸ்டர் செய்யும் செயல்கள் பலருடைய வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் இதைகுறித்து ரட்சிதாவின் கணவர் டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் .இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் பெயரில் ராபர்ட் மாஸ்டர் பெயரும் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி அவர்தான் கடைசி இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து நிவாஷினி இருக்கிறார்.

நிவாக்கு தான் ஓட்டு
இரண்டு தினங்களுக்கு முன்புவரைக்கும் ராபர்ட் மாஸ்டர் சேஃபாக இருந்தார். கடைசி இடத்தில் நிவாஸினியும் அவரை தொடர்ந்து குயின்சியும் இருந்தார். ஆனால் இப்போது நிவாஷினி ராபர்ட் மாஸ்டர் கடைசி இடத்திலும் அவரைத் தொடர்ந்து நிவாஸ்னியும் இருக்கின்றார் .இந்த நிலையில் தினேஷ் நிவாஸினுக்கு ஓட்டு போட்டு அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்திருக்கிறார். நான் நிவாவுக்கு தான் ஓட்டு போட்டேன் என்று அவர் அதில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு காரணம் ராபர்ட் மாஸ்டர் வெளியே வரவேண்டும் என்பதுதானா? ஏனென்றால் நிவாக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் ஒரு சில வாக்குகள் தான் வித்தியாசமாக இருக்கிறது. அதனால் தான் தினேஷ் இப்படி பண்ணுகிறாரா ?என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் இந்த முடிவு சரியானது தான் நாங்களும் இதையே செய்கிறோம் என்று இவருக்கு கருத்துக்களையும் கூறி வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications