விஜய் டிவி பிரபலத்தோடு பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம்.. மறைத்த ரகசியம் லீக் ஆகிவிட்டது
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா விஜய் டிவி பிரபலம் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறாராம்.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல பார்த்ததும் ரசிகர்களை கவர்ந்து விடும் ரித்விகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக தனது சமையல் திறமையை காட்டி தன்னுடைய கலகலப்பான திறமையின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் தான். தற்போது சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு திடீரென திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறதாம்.

பாக்கியலட்சுமி அமிர்தா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்விகா நிஜ வாழ்க்கையில் திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்க இருக்கிறாராம். சீரியலில் இவருக்கும் எழிலுக்கும் திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது இவருடைய நிஜ திருமண செய்தி பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுவரைக்கும் சிங்கிளாக வலம் வந்து கொண்டிருந்த ரித்திகா விஜய் டிவியை சேர்ந்த பிரபலம் ஒருவரை தான் திருமணம் செய்ய இருக்கிறாராம்.

வதந்திக்கு விளக்கம்
பாக்கியலட்சுமி சீரியலுக்கு வருவதற்கு முன்பு தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு குக்காகவும் பலருக்கும் தெரிந்தவர் தான் ரித்திகா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருடன் பாலா நிகழ்ச்சியின் கண்டெண்டுக்காக பேசி பழகுவதை வைத்து பலரும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகளை பரப்பி வந்தனர் .அதை குறித்து கோபமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு நண்பர்களாக பழகுபவர்கள் எல்லாம் காதலித்து விடுவார்களா? ஒன்றாக சேர்ந்து நடித்தாலோ அல்லது வேலை செய்தாலோ உடனே காதல் என்று சொல்லி விடுவார்களா? நான் யாரை காதலிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் அதனால் இப்படி யாரும் பேசாதீர்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

விரைவில் திருமணம்
அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் ரித்திகா கலந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வினு என்ற நபர் தானாம். அவரைத்தான் ரித்திகா காதலித்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

மாப்பிள்ளை இவர்தான்
ரித்திகாவின் திருமணம் எப்போது என்று வெளியாகவில்லை என்றாலும் நவம்பர் 27ஆம் தேதி மாலை வரவேற்பு நடைபெற இருக்கிறதாம். இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். அது மட்டுமல்லாமல் ரித்விகா திருமணம் செய்து கொள்ள போகும் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வருகிறாராம். அதுபோல ரித்திகாவும் விஜய் டிவியில் நடித்து வருவதால் இவர்களுக்குள் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications