சீரியல் நடிகரை 43 வயதில் திருமணம் செய்த நடிகை சீதா... அவருடைய விவாகரத்தான இரண்டாவது கணவர் இவர்தான்!?
சென்னை: நடிகை சீதாவின் கடந்த கால வாழ்க்கையை தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தற்போது தனியாக தன்னுடைய அம்மாவோடு வசித்து வரும் சீதாவின் திருமண வாழ்க்கை பலருக்கும் தெரியாத விஷயங்கள் இப்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
நடிகர் பார்த்திபனை பிரிந்த பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து சீதா சீரியல் நடிகரை திருமணம் செய்து இருக்கிறார்.

வாழ்க்கையை முடித்த திருமணம்
80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். அந்த காலகட்டத்தில் பிஸியாக நடித்த நடிகையாக இவர் இருந்தாலும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் கூட நடித்து இருந்திருக்கிறார். பல படங்களில் நேரம் ஒதுக்க முடியாத நிலையால் அந்த வாய்ப்புகளை கூட ஒதுக்கி வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு பிஸியாக இருந்த இவருடைய சினிமா வாழ்க்கை பாலாய் போனதற்கு முக்கியமான காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான்.

காதல் திருமணம்
முதல் முறையாக பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் நடித்த சீதா ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறி, பிறகு தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலினால் தான் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்தின் பாதியிலேயே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது. சீதாவின் வீட்டில் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் பார்த்திபனோடு 1989 ஆம் ஆண்டு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு சீதா நடிப்பதில் பார்த்திபனுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் பிஸியாக நடித்து வந்த சீதா திருமணத்திற்கு பிறகு 10 வருடங்கள் சினிமாவை விட்டுவிட்டாராம். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்திருக்கின்றனர்.

நடிகர் சதீஷ்
அது மட்டுமல்லாமல் ஒரு மகனையும் சீதா பார்த்திபன் தம்பதி தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பத்து வருடங்கள் கழித்து இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருக்கிறார். விவாகரத்து ஆனபிறகு மீண்டும் தன்னுடைய தந்தை வீட்டுக்கே வந்த பிறகு தன்னுடைய நடிப்பை துவங்கியிருக்கிறார். அப்போது இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். தனது இரண்டாம் இன்னிங்ஸ் கஷ்டப்பட்டு தொடங்கிய சீதா மீண்டும் 2010 ஆம் ஆண்டு நடிகர் சதீஷை தனது 43-வது வயதில் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். நடிகர் சதீஷ் சீரியல் நடிகர் அதுவும் சன் டிவியில் பிரபலமான ஆனந்தம் சீரியலில் நடித்தவர்.

இரண்டாவது திருமணத்திலும் ஏமாற்றம்
இரண்டாவது திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த சீதா சில ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்களுடைய வாழ்க்கை முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். எனக்கு துணை வேண்டும் என்பதற்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என்றும் சதீஷ் என் வாழ்க்கையில் வந்ததை எண்ணி சந்தோஷப்படுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண் ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது என்பதற்காகவே சதீஷை திருமணம் செய்து கொண்டேன் என்று அந்த நேரத்தில் கூறியிருந்தார். ஆனால் சீதாவின் இரண்டாம் திருமணமும் சரியாக அமையவில்லையாம். அதனாலே திருமணமான 6 ஆண்டுகளில் சதீஷை விவாகரத்து செய்திருக்கிறார். தற்போது தன்னுடைய தாயாருடன் தனியாக வசித்து வரும் சீதா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். வீட்டிலே மாடித்தோட்ட வளர்த்து தன்னுடைய மனநிலையை சந்தோஷமாக மாற்றிக்கொண்டு பிஸியாக இருந்து வருகிறார்.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications