எதிர்நீச்சல் ரேணுகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா...? முதல் முறை வெளியான குடும்ப புகைப்படம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் நடிக்கும் பிரியதர்ஷினி தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னைவிட வளர்ந்த அவருடைய மகனை பார்த்து இவருக்கு இவ்வளவு பெரிய மகான் இருக்கிறாரா? என்று பலர் வியப்படைந்து இருக்கிறார்கள்.
தீபாவளி பண்டிகையை தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடிய பிரியதர்ஷினிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

எதிர்நீச்சல் ரேணுகா
சின்னத்திரை நடிகை ஆன பிரியதர்ஷினி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியலில் இவருடைய அல்டிமேட் நடிப்பை பார்த்து பலர் இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஃபேன்ஸ் பேஜ்க்களை தொடங்கி இருக்கின்றனர். இவர் இந்த சீரியலுக்கு வருவதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.அது மட்டும் அல்லாமல் ஒரு கிளாசிக்கல் டான்ஸர் ஆகவும் இவர் இருந்து வருகிறார். சின்னத்திரை பிரபலமான டி டி என்கிற திவ்யதர்ஷினி அக்கா தான் பிரியதர்ஷினி என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

தொகுப்பாளராக அறிமுகம்
பிரியதர்ஷினி சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி மற்றும் சூர்யா டிவி போன்ற சின்னத்திரை சேனல்களில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார் .அதோடு இவர் தாவணி கனவுகள் ,காவல் கைக்கடிகள் ,நாகம் ,தெலுங்கில் நாக தேவதை,குற்றவாளிகள், இந்தியா கோவில் ,உயிரே உனக்காக, இதயத்தை திருடாதே ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் மெகா சீரியலான விழுதுகள் சீரியல் மூலமாக தான் தன்னுடைய சீரியல் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.

நிஜ குடும்ப புகைப்படம்
தனக்கு டான்ஸ் என்பது அத்துப்பிடி என்பதால் மானாட மயிலாட சூசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு விஜய் டிவியில் பாய்ஸ் வெட்ஸ் கேர்ள்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோவிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். இவர் ரமணகிருஷ்ணர் என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய நடிப்பை விட்டு விடாமல் தொடர்ந்து வரும் இவர் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். தீபாவளியில் இவருடைய மகன் மற்றும் கணவரோடு எடுத்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் வியந்து போய் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

நிஜ கேரக்டர் இதுதான்
எதிர்நீச்சல் சீரியலில் இவர் ரேணுகா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவருடைய நிஜ கேரக்டர் இந்த மாதிரியே கிடையாதாம் .தன்னுடைய சுய கௌரவத்திற்காக தனக்கு பிடித்த வேலையை செய்து வருகிறார். கணவரை எதிர்த்து பேசாமல் அழுது கொண்டிருக்கும் பெண்ணாக அந்த கேரக்டரையே மாறி இருக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் இவருடைய சகோதரியான டிடிக்கு ஒரு அம்மாவாக இருந்து வளர்த்து வருவதாக டிடி பல இடங்களில் கூறி இருக்கிறார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications