சரிகமப செந்தமிழன் எங்க அண்ணன் தான்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த யோகஸ்ரீ.. இணைந்து ஒலித்த மயக்கும் குரல்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனயர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்திருக்கும் "சின்னு செந்தமிழனுக்காக" இந்த நிகழ்ச்சியில் யோகஸ்ரீ மீண்டும் பாட வந்திருக்கிறார். யோகஸ்ரீ சரிகமப லிட்டில் சான்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரன்னராக ஆக தேர்வானவர். அவர் இப்போது சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் பாடி இருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனாலேயே ஒவ்வொரு சேனலிலும் போட்டி போட்டு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஜூனியர்களுக்கான சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

சரிகமப ரன்னர் யோகஸ்ரீ
அந்த நிகழ்ச்சியில் ரன்னராக யோகஸ்ரீ தேர்வானார். வின்னராக திபினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் ரசிகர்கள் அதிகமானோர் யோகஸ்ரீக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்திருக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தொடங்கி இருக்கும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் யோகஸ்ரீ வந்திருக்கிறார். அவரை பார்த்ததும் அங்கிருந்த நடுவர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

யோக ஸ்ரீயின் அண்ணன்
அப்போது யோகஸ்ரீ அவர்களிடம் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது என்னுடைய அண்ணனுக்காக தான். என்னுடைய அண்ணன் வேறு யாரும் இல்லை சின்ன செந்தமிழன் தான். அவர் எங்க ஊரில் இருந்து வந்திருக்கிறார். அவருக்கு சப்போர்ட்டாக நான் வந்திருக்கிறேன் என்று சொல்லி செந்தமிழனுக்காக தன்னுடைய குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்து அங்குள்ள கயிறு ஒன்றை செந்தமிழன் கையில் கட்டி விட்டு அண்ணன் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்கள் அட்வைஸ்
அதற்கு பிறகு செந்தமிழன் மற்றும் யோக ஸ்ரீ இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் அதிகமான ரசிகர்கள் இந்த சீசனிலும் யோகஸ்ரீ தொடர்ந்து பாட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறார்கள். அதுபோல யோகஸ்ரீ திரைப்படங்களில் பாடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் தெரு நிகழ்ச்சிகளில் பாட வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள். காரணம் சரிகமப நிகழ்ச்சிக்கு பிறகு சமீபத்தில் ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சியில் யோக ஸ்ரீ பாடி இருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து யோகஸ்ரீக்கு அதிகமான ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications