இப்பெல்லாம் டைவர்ஸ் ஈசியாப் போச்சு.. நல்லதுன்னு நெனச்சு கெட்டதை தேடும் இளசுகள்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் சின்னஞ்சிறுசுங்ககளான சந்தோஷ், ஜனனி ஏதோமுடிவெடுக்க, அது என்ன வினையில் வந்து முடியுதுன்னு நல்லா காமிச்சு இருக்காங்க.
வீட்டுல இருக்கறவங்க வற்புறுத்தலுக்காக கல்யாணம் பண்ணிக்கறது, பின் புருஷம் பொண்டாட்டி மாதிரி நடிக்கலாம்னு முடிவெடுத்து, நடிச்சுக்கிட்டே, யாருக்கும் தெரியாம டிவோர்ஸுக்கு அப்ளை பண்றது.
இந்த காலத்து புள்ளைங்களுக்கு எல்லாமே சுலபமான காரியமானது ஒரு விதத்துல நல்லதா இருந்தாலும் பல விதத்துல கெட்டதாத்தான் முடியுது.

பணம் பிடுங்கும் வக்கீல்
சந்தோஷிடம் இன்னும் பணம் வேண்டும் என்று வக்கீல் கேட்க, சும்மா பணம் குடுக்க முடியாது சார். எங்ககிட்ட பணமே இல்லை. என் மனைவி ஜனனியோட நகைகள் எல்லாத்தையும் வித்தாச்சு. இனிமே பணத்துக்கு எங்க போவோம்னு சந்தோஷ் சொல்றான்.

பண்றது பாருங்க..
சந்தோஷ் தம்பி கோபப்படறதுல ஒண்ணும் அர்த்தம் இல்லை. நான் கிரிமினல் லாயர். போன மாசம்தான் இந்த ஸ்மார்ட் போன் வாங்கினேன்.எங்களுக்கெல்லாம் தேவைப்படுமே... இப்போ நீங்க பேசினதை கூட ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன்.இதை உங்க மாமனார்கிட்ட காமிச்சேன்னு வைங்க. அப்படியே மயக்கம் போட்டு விழுந்துருவாருன்னு சொல்றார்.

பார்த்திருக்கீங்க
சார் என்ன வேலை சார் பார்த்திருக்கீங்க... தயவு செய்து என் மாமனார்கிட்ட போட்டு காமிச்சுடாதீங்க. மாமனார் ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவார் சந்தோஷ் கெஞ்சுகிறான்.

நோ சொல்லிட்டார்
உங்க கையில நோட்டீஸ் குடுக்க அமீனா மாட்டேன்னுட்டார். டெஸ்பாட்ச் செக்ஷன்ல போயி ஆளை புடிச்சுதான் உங்க கையில கொடுக்க ஏற்பாடு பண்ணனும். அட்ரஸ் குடுத்துருங்க. இதுக்கு கூடுதல் செலவாகும் பார்த்து குடுத்துடு, இல்லை உங்க மாமனார் மாங்கா மடையன், உன்னை நல்ல மாப்பிள்ளைன்னு நினைச்சுகிட்டு இருக்கான் பாருங்க அவன்கிட்ட போட்டு காட்டிடுவேன்னு மிரட்டறார் வக்கீல்.

ஏன் திட்டுறீங்க
சார் எந்த அட்ரஸ்ல தர்ரதுன்னு சொல்றேன், பணமும் ஏற்பாடு செய்யறேன் சார். அதுக்கு ஏன் மாமனாரைத் திட்டறீங்கன்னு கொந்தளிக்கறான் சந்தோஷ்.

ஜனனி அசால்ட்
சந்தோஷுக்கு வக்கீல் போன் பன்றாரு.. பணம் கேட்டு அவர் மிரட்டுவதை அறிந்த ஜனனி, போனை எடுத்து, சொல்லுங்க சார் என்கிறாள். புருஷன்கிட்ட போனை குடும்மான்னு சொல்றார்.அவர் தூக்கறாரு சார், அட்ரஸ் விஷயம்தானே.. எங்க வீட்டு அட்ரஸுக்கு அனுப்புங்கன்னு அசால்ட்டா சொல்றார்.

வக்கீல் கடுப்பு
என்னம்மா நீ பேசற, உன் புருஷன்கிட்ட குடுன்னு சொன்னேன்லன்னு சொல்றார். நான்தான் சொன்னேனே சார் அவர் அசந்து தூங்கறார். நான் சொன்னதை நீங்கள் செய்ங்கன்னு சொல்லிட்டு வீட்டு முகவரியை கொடுக்கிறாள்.

பேச சொல்றியா
என்ன சந்தோஷ் போனை எடுக்க கஷ்டமா போச்சா... பொண்டாட்டிய விட்டு பேச சொல்றன்னு கேட்க, .இல்லை சார் நான் தூங்கிட்டு இருந்தேன்னு சந்தோஷ் சொல்றான். வக்கீல்கிட்ட பொய் பேசாதீங்க சந்தோஷ்.

வாங்க
இப்போ உடனே கிளம்பி வாரீங்களா, இல்லை அந்த ஆடியோவை உங்க மாமனார்கிட்ட போட்டு காமிக்கவான்னு மிரட்டறார். ஜனனி கொடுத்த காபியை அவசரமாக குடிச்சுட்டு, எங்க போறேங்க சந்தோஷ்னு கேட்க, அவசர வேலையா போறேன்.. வந்து சொல்றேன்னு கிளம்பறான்.

வெள்ளாமை
சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சொல்ற மாதிரி திருமணம் சீரியலின் சந்தோஷ், ஜனனி டிவோர்ஸ் விவகாரம் நடந்துகிட்டு இருக்கு. இந்த காலத்துல பல இளசுகள் இப்படித்தான் எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்கறாங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications