சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறிய பிரபலசீரியல் நடிகர்கள்..எதிர்பார்க்காத ட்விஸ்ட்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் கணவன் மனைவியாக நடிக்கும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் தங்களுக்கு எங்கேஜ்மென்ட் முடிந்து இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.
சென்னை: ஜீ தமிழில் முன்னணியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்தவர்கள் தற்போது நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடியாக மாறி இருக்கின்றனர்.
சீரியல் நடிகை சந்தியா மற்றும் சீரியல் நடிகர் பிரிட்டோ இருவருக்கும் எங்கேஜ்மென்ட் முடிந்து இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருக்கின்றனர்.
சீரியலில் இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவியாக இருக்கும் நிலையில் நிஜ வாழ்க்கையில் ஒற்றுமையாக இருக்க ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

பெற்றோர்களின் கதை
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாகவும் அதிகமான ரசிகர்களால் பாராட்டை பெற்று வரும் சீரியலாக தவமாய் தவமிருந்து இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஒரு குடும்பத்தின் தாய் தந்தை தன்னுடைய வயதான காலத்தில் பிள்ளைகளால் படும் துயரங்கள் மற்றும் எந்த தாய் தந்தையர்களும் வயதான காலத்தில் கஷ்டங்களை சந்திக்கக்கூடாது என்பதை பற்றியதுவாக இந்த சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நான்கு பிள்ளைகளை பெற்ற ஒரு தந்தை வேலையில் இருந்து ரிட்டையர்டு ஆகின்றார். அதுபோல குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வரும் அம்மா இருவரும் அதற்குப் பிறகு என்ன மாதிரி ஆகின்றனர் என்பதை பற்றியதாக இருக்கிறது.

கடைசி காலங்களில் படும் கஷ்டங்கள்
தவமாய் தவமிருந்து சீரியல் பல்வேறு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திருக்கிறது. காரணம் பலருடைய வீட்டில் இந்த சீரியலில் நடப்பது போன்று தான் நடந்து வருகிறது சமுதாயத்தில் அதிகமான முதியோர் இல்லங்கள் அதிகரித்து வரும் நிலையில், முதியோர்கள் தங்களுக்கு என்று எதுவும் சேர்த்து வைக்காமல் பிள்ளைகளுக்காகவே அனைத்தையும் கொடுத்துவிட்டு அவர்களுடைய கஷ்ட காலங்களில் படும் வேதனைகள் அந்த இடத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று இந்த சீரியல் உணர்த்துகிறது.

மார்க்கண்டேயன் குடும்பம்
இந்த சீரியலில் மார்க்கண்டயன் குடும்பத்தின் தலைவராகவும் சீதா அவருடைய மனைவியாகவும் இருக்கிறார். அவருடைய குழந்தைகளாக ரேவதி, ரவி ,ராஜா மற்றும் மலர் என நான்கு பேர் இருக்கின்றனர். அவர்களில் மலர் மார்க்கண்டேயன், சீதா சம்மதம் இல்லாமல் பாண்டியை காதலித்து திருமணம் செய்து விட்டார். ஆரம்பத்தில் இவர்களுக்குள் நன்றாக சென்றிருந்த நேரத்தில் இப்போது பாண்டி மற்றும் மலர் இடையே சண்டை போட்டு கோபத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று மார்க்கண்டேயன் நினைக்கிறார். மார்க்கண்டேயனுக்கு பிடித்த மருமகனாக பாண்டி இருக்கிறார்.

எளிமையான எங்கேஜ்மென்ட்
இந்த நிலையில் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அதே பாண்டியும் மலரும் ஒன்றிணைந்து இருக்கின்றனர். பாண்டியாக நடிக்கும் பிரிட்டோவும் மலராக நடிக்கும் சந்தியாவும் நிஜத்தில் எங்கேஜ்மென்ட் முடிந்திருக்கும் செய்தியை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருப்பதாகவும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். இந்த ஜோடியின் எங்கேஜ்மென்ட் 2023 ஜனவரி 25 ஆம் தேதி முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் தங்களுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை இவர்கள் இன்று தான் வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய எங்கேஜ்மென்ட் எளிமையாக முடிவடைந்து இருக்கிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications