கேரளாவில் களைகட்டிய புத்தாண்டு! ஒரே நாளில் 107 கோடிக்கு மது விற்பனை! டஃப் கொடுப்பாங்க போலயே!
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு மது விற்பனை அரசு மது கடைகளில் நடந்திருக்கிறது. புத்தாண்டு தினத்தில் அம்மாநிலத்தில் உள்ள பெவ்கோ கடைகளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

மது விற்பனை
குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். கொரோனா காலத்தில் கடைகள் மூடப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக கடந்த ஆண்டு சாதாரண நாட்களில் கூட அதிக அளவு மது விற்பனை இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் போல கேரளாவில் அரசு மதுபான கடைகள் இருக்கிறது. அவை பெவ்கோ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் குடிகாரர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

சாதனை விற்பனை
மேலும் தனியார் மதுபானக்கூடங்கள் சாராயக்கடைகள் கள்ளுக்கடைகளும் அங்கு இயங்கி வருகிறது. தமிழகத்தில் இருந்து கூட கேரளாவுக்கு சென்று மதுபானங்களை வாங்கி வருவதையும் பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பண்டிகை காலங்களில் மது விற்பனை குறைவாகவே இருக்கும். இதற்கு தனியார் கடைகளும் ஒரு காரணம். அதே நேரத்தில் ஓணம் பண்டிகை கிறிஸ்துமஸ் புத்தாண்டு தீபாவளி ஆகிய நாட்களில் கேரளாவில் வழக்கத்தை விட மது விற்பனை சில நேரங்களில் அதிகரிப்பதும் உண்டு. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு மது விற்பனை அரசு மது கடைகளில் நடந்திருக்கிறது.

100 கோடி ரூபாய்
புத்தாண்டு தினத்தில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் போல கேரளா அரசின் பெங்கோ நிறுவனம் மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 256 கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கடைகளில் நேற்று முன்தினம் 31ஆம் தேதி மட்டும் சுமார் 107 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டிருக்கிறது. சராசரியாக மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் 10 லட்சம் ரூபாய்க்கும் குறையாமல் மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. சாதனை விற்பனையாக திருவனந்தபுரம் பவர் ஹவுஸில் உள்ள பெவ்கோ கடையில் 1.12 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருப்பதாக அம்மாநில அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

600 கோடி லாபம்
மேலும் புத்தாண்டு தினத்தில் 50 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடந்திருக்கலாம் எனவும் கள்ளச் சந்தையில் மது விற்பனையை அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கண்காணித்து வருவதால் அரசு கடைகளில் மது விற்பனை மிக அதிகமாக இருப்பதாகவும். இந்த ஆண்டு மட்டும் பண்டிகை காலங்களில் 690 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளதாகவும், இதன் மூலம் வரி வருவாயாக மட்டும் கேரளா அரசுக்கு 600 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர் அம்மாநில அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications