அப்பா உயிர் முக்கியம்.. கல்லீரல் தானத்துக்கு அனுமதியுங்க..நீதிமன்றம் சென்ற 17 வயது மகள்.. நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: ‛‛அப்பாவின் உயிரை காப்பாற்ற வேண்டும். கல்லீரல் தானம் செய்ய விதிகளில் தளர்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும்'' எனக்கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் 17 வயது மகள் மனுத்தாக்கல் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இந்த மனு மீது தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவை சேர்ந்தவர் 48 வயது நபர். இவருக்கு மனைவி மற்றும் 17 வயது நிரம்பிய மகள் உள்ளார். இந்நிலையில் தான் அந்த நபர் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். இந்த சோதனையில் அதிர்ச்சி முடிவு வெளியானது.

தந்தைக்கு கல்லீரல் பாதிப்பு
அதாவது 48 வயது நிரம்பிய நபருக்கு கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை அளித்தாலும் கூட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் சோகமடைந்தனர்.

தானம் செய்ய மகள் தயார்
இந்நிலையில் தான் அந்த நபரின் மகளான 17 வயது சிறுமி கல்லீரல் தானம் செய்ய முடிவு செய்தார். அதாவது தனது கல்லீரலின் ஒருபகுதியை தந்தைக்காக தானம் வழங்குவதாக அவர் டாக்டர்களிடம் தெரிவித்தார். ஆனால் அவரது தானத்தை டாக்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் இந்தியாவில் மனித உறுப்பு மற்றும் திசு மாற்று சட்டம் 2014ன் படி ஒருவர் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். இதனால் தான் அவரது தானத்தை டாக்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இருப்பினும் தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என 17 வயது நிரம்பிய சிறுமி உறுதியாக உள்ளார். இதனால் தான் அவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ‛‛எனது தந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. நான் கல்லீரல் தானத்தை செய்ய தயாராக உள்ளேன். உறுப்பு தானம் செய்வதில் மருத்துவத் தடைகள் எதுவும் இல்லை. இருப்பினும் உறுப்பு மற்றும் திசு மாற்று விதிகள் 2014 விதி 18ன் படி தானம் செய்பவரின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

வயதில் விலக்கு கோரி
மேலும் மகளாக இருப்பதால் எனது கல்லீரலின் ஒரு பகுதியை 48 வயதான தனது தந்தைக்கு தானம் செய்ய தயாராக இருந்தாலும் கூட சட்டம் அனுமதிக்கவில்லை. இதனால் தந்தையின் உயிர் மீது கவனம் கொண்டு 2014 விதி 18 ல் வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு நேற்று நீதிபதி விஜி அருண் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிஆர் ஷாஜி வாதாடினர். வாதங்களை கேட்ட நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறையில் அறிவுறுத்தல்களை பெற்று அதன் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை இன்று ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்றும் கேரளா உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications