Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான்.. சர்ச்சையை கிளப்பிய பஜ்ரங்தள்! பேரணியில் தொடர் முழக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் என்று வெளிப்படையாக பஜ்ரங்தள் அமைப்பினர் முழக்கமிட்டவாறு வீதிகளில் ஊர்வலமாக சென்றுள்ளனர்.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த மசூதி இடிக்கப்பட்டது வேண்டுமானால் 1992ஆக இருக்கலாம்.

ஆனால் இதற்கான திட்டமிடல் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக இந்த வழக்கை ஆய்வு செய்த பலரும் கூறியுள்ளனர். அதாவது 1949ம் ஆண்டுதான் இதற்கான முக்கிய பிரச்னை தொடங்கியது.

 ரத யாத்திரை

ரத யாத்திரை

இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் 22-23ம் தேதிகளில் இந்துத்துவா ஆதரவாளர்கள் சிலர் பாபர் மசூதியில் ரமார் சிலைகளை கொண்டு வைத்தனர். அதன் பின்னர் ராமர் மீண்டும் தனது சொந்த இடத்திற்கு திரும்பிவிட்டார் என்று கூறி பிரசாரம் மேற்கொண்டனர். இது மாநிலம் முழுவதும் உள்ள இந்துத்துவா ஆதரவாளர்களுக்கு பெரும் உத்வேகமூட்டியது. ஆனால் சிலையை இந்துத்துவ ஆதரவார்கள்தான் வைத்தனர் என்று காவல்துறையினர் கண்டுபிடித்துவிட்டனர். இருந்தும் சிலை அந்த இடத்திலிருந்து அகற்றப்படவில்லை. ஒருவேளை சிலை அப்போதே அகற்றப்பட்டிருந்தால் பிரச்னை இவ்வளவு தூரம் வெடித்திருக்காது என சமூக ஆர்வலர்கள் சிலர் தற்போது கூறியிருக்கின்றனர். ஆக இப்படி தொடங்கி பிரச்னையை பயன்படுத்தி விஷ்வ இந்து பர்ஷித் சார்பில் 1984ம் ஆண்டு ரத யாத்திரை ஒன்றை மேற்கொண்டது.

விசாரணை

விசாரணை

அதாவது, இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை சிறையில் வைத்திருப்பதை போன்று தேர் ஒன்று வடிவமைக்கப்பட்டு அது வட மாநிலங்கள் முழுவதும் பயணித்தது. இதனை பார்த்த இந்து மக்கள் விஎச்பிக்கு முழு ஆதரவு அளித்தனர்.
ஆனால் இந்த யாத்திரைக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டது.
இதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தவர்கள்தான் பஜ்ரங்தள் அமைப்பினர். இதனை தொடர்ந்து 1990ம் ஆண்டு அத்வானி நடத்திய யாத்திரை என தொடர் யாத்திரையையடுத்து 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் முன்னணியில் இந்த அமைப்பினர் செயல்பட்டதாக வழக்கு விசாரணை ஆவணங்கள் கூறுகின்றன.

 ராமர் கோயில்

ராமர் கோயில்

இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாக பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி என 68 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கும் வலதுசாரி அமைப்புகள் நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கு பல நீதிமன்றங்களை கடந்து கடைசியாக 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை கட்டலாம் என்று அறிவித்தனர்.

துக்கம்

துக்கம்

மறுபுறம் 68 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 68 பேரில் 32 பேர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக கூறி இந்த 32 பேரை மட்டுமே விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரித்தது. இந்த வழக்கும் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. ஆனால், ஆண்டு தோறும் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை இஸ்லாமிய அமைப்புகள் துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர்.

வீடியோ

வீடியோ

இந்நிலையில் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தின் இரிட்டி பகுதியில் நேற்று பஜ்ரங்தள் அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் என்று முழக்கமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+