‘காசி'னு பெயர் வைச்சிட்டு மாட்டிறைச்சி விற்கிறாங்க.. வீடியோ வெளியிட்ட யூடியூபர் மீது பாய்ந்தது வழக்கு
திருவனந்தபுரம்: ''கொச்சியில் 'காசி ஆர்ட் கஃபே' என பெயர் வைச்சிட்டு மாட்டிறைச்சி உணவு பரிமாறுகிறார்கள். மகாத்மா காந்தியுடன் முகமது அலி ஜின்னாவின் சிலையை வைத்துள்ளார்கள்'' என்று விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர் மீது அமைதியை சீர்க்குலைப்பது, கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடஇந்தியாவை சேர்ந்தவர்அம்ரித் சிங் டேரன். இவர் பிரபல யூடியூபராக உள்ளார். இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து அதனை யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் அவர் கேரளாவின் கொச்சிக்கு சென்றார்.
போர்ட் கொச்சி பகுதிக்கு சென்ற அம்ரித் சிங் டேரன், 'காசிஆர்ட் கபே' என்ற உணவகத்துக்கு சென்றுள்ளார். பிறகு அம்ரித் சி்ங் டேரன் அந்த கபேவை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில், ''இந்துக்களின் புனித இடமாகன காசியின் பெயரில் இயங்கும் கபேவில் மாட்டிறைச்சி உணவுகள் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அதிகமான இஸ்லாமியர்கள் வாழ்வதால் இப்படி செய்கின்றனர். அதோடு மகாத்மா காந்தி சிலையுடன் சில்வரில் முகமது அலி ஜின்னாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை தடுத்து கேரளாவை காப்பாற்ற வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. அம்ரித் சிங் டேரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவிக்க தொடங்கினர். இதனால் இந்த வீடியோ வைரலாக பரவியது. இணையதளங்களில் பெரிய அளவில் விவாதத்தையும் கிளப்பியது. யூடியூபர் அம்ரித் சிங் டேரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் கொந்தளித்தார்.
அதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் இந்த வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ''கேரளம் ஒற்றுமையுடன் இருக்கிறது. மதவெறிக்கு இ்ஙகே இடமில்லை மாநிலத்திற்கு வெளியே இருந்து வந்த விலாக்கர் ஒருவர் இன்ஸ்டகிராமில் வெளியிட்ட சமீபத்திய வீடியோ 'ஃபோர்ட் கொச்சி' குறித்து தவறான தகவல்களை பரப்பும் வகையிலும், நம் மாநிலத்தை பற்றிய எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கவும் , இரு சமூகங்கள் இடையே பிளவை ஏற்படுத்தவும் முயன்றுள்ளது. இது ஏற்க முடியாது'' என்று சாடியுள்ளார்.
மேலும் பல்வேறு தரப்பினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் தான் அம்ரித் சிங் டேரன் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 353(2) (அமைதியை சீர்க்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படுதல்) மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
