திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு.. கேரளாவில் பாஜகவினர் போராட்டம்.. போலீஸ் குவிப்பு!

சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சபரிமலை கோவிலுக்குள் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் நுழைந்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பின் முதல்முறை 50 வயதிற்கும் குறைவான பெண்கள் இப்போதுதான் கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

அதிகாலை 3.45க்கு கோவிலுக்குள் சென்றவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்தனர். இது வீடியோவாக வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

பரிகாரம் செய்தனர்

இந்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. இதையடுத்து கோவிலின் நடை அடைக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததால் பரிகார பூஜைகள் செய்யப்பட்டது. 1 மணி நேர பூஜை பின் மீண்டும் பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பாஜக எதிர்ப்பு

பாஜக எதிர்ப்பு

இதற்கு பாஜக உள்ளிட்ட இடதுசாரி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சிலர் காலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பாஜக எம்.பிக்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு வேண்டும் என்றே அந்த பெண்களை கோவிலுக்குள் அனுப்பியதாக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

போராட்டம் செய்கிறார்கள்

போராட்டம் செய்கிறார்கள்

இந்த நிலையில் சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், கொல்லத்திலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரளாவின் மற்ற இடங்களிலும் பாஜகவினர் போராட்டம் செய்ய உள்ளனர்.

மகளிரணி போராட்டம்

பாஜக மகளிரணி சார்பில் இந்த் போராட்டம் நடக்கிறது. அதேபோல் கேரள தலைமைச்செயலகம் முன்பும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தற்போது கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
Kerala BJP is protesting against the entry of women into Sabarimala temple today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X