திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் சே குவேரா மகள் அலைடா குவேரா- முதல்வர் பினராயி விஜயனுடன் சந்திப்பு!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: புரட்சியாளர் சே குவேராவின் மகள் அலைடா குவேரா கேரளா முதல்வர் பினராயி விஜயனை இன்று சந்தித்து பேசினார்.

இந்தியாவுக்கு கடந்த வாரம் கியூபாவில் இருந்து அலைடா குவேரா உள்ளிட்ட குழு ஒன்று வருகை தந்தது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் கியூபா அமைச்சராக இருந்த சே குவேரா அரசு முறை பயணமாக வருகை தந்தார்.

Che-Guevara daughter Aleida meets Kerala CM Pinarayi Vijayan

இதன் 60-வது ஆண்டு விழாவையொட்டி கியூபா குழு இந்திய பயணம் மேற்கொண்டிருக்கிறது. டெல்லியில் இடதுசாரி கட்சித் தலைவர்கள் அலைடா குவேராவை சந்தித்து பேசினர்.

பின்னர் நேற்று கேரளாவுக்கு அலைடா மற்றும் கியூபா குழுவினர் வருகை தந்தனர். இன்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.

இதையடுத்து கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அலைடா குவேரா பங்கேற்க உள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏக்களை நடு தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.. சட்டசபையில் குமாரசாமி ஆவேசம் அதிருப்தி எம்எல்ஏக்களை நடு தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.. சட்டசபையில் குமாரசாமி ஆவேசம்

வரலாற்று விசித்திரம்

1959-ம் ஆண்டு சே குவேரா இந்தியாவுக்கு வருகை தந்தார். அகில இந்திய வானொலிக்கு பேட்டியளித்தார். பின்னர் இடதுசாரிகளின் கோட்டையான கொல்கத்தாவுக்கும் சேகுவேரா வருகை தந்தார்.

ஆனால் அப்போது இடதுசாரி தலைவர்கள் ஒருவர் கூட சேகுவேராவை சந்திக்கவில்லை. சேகுவேராவின் வருகையை இடதுசாரிகள் புறக்கணித்தனர். நேருவின் விருந்தினராக சேகுவேரா வருகை தந்ததை அவர்கள் விமர்சித்தனர்.

சேகுவேராவின் மரணத்துக்குப் பின்னர் அவரை தங்களது அடையாள பிம்பங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் இடதுசாரிகள். ஆனாலும் கூட அலைடா குவேராவின் தற்போதைய இந்திய வருகையையும் பத்தோடு பதினொன்றாகவே இந்திய இடதுசாரிகள் பார்ப்பது புரியாத புதிர்தான்.

English summary
Che-Guevara daughter Aleida today met Kerala CM Pinarayi Vijayan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X