திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிலேயே கொரோனா இல்லாத மாநிலமாக உருவெடுக்கும் கேரளா.. குணப்படுத்தியதில் சூப்பர் சாதனை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவே கடுமையாக போராடி வரும் நிலையில் கேரளா மாநிலம் கொரோனா இல்லாத மாநிலமாக உருவெடுப்பதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

Recommended Video

    கொரோனா தடுப்பு நடவடிக்கை... உலக நாடுகளை வியக்க வைத்த கேரளா

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துவரும் நிலையில் அதிவேகமாக குறைந்துவருகிறது

    ஆரம்பத்தில் முதலிடத்தில் இருந்த கேரளா இன்று டாப் 10 கொரோனா மாநிலங்கள் வரிசையில் இல்லை என்ற நிலைக்கு மாறி உள்ளது. கேரளாவில் இன்று வெறும் 3 பேருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 55 பேர் குணமாகி உள்ளனர். இந்நிலையில் கேரளா இந்தியாவில் கொரோனா இல்லாத மாநிலமாக உருவாகும் என்ற நம்பிக்கை உருவாக்கி உள்ளது

    கேரளாவில் சூப்பர்

    கேரளாவில் சூப்பர்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து இதுவரை 857 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதில் கேரளாவில் தான் மிக அதிகம் பேர் குணம் அடைந்துள்ளார்.

    178 பேர் சிகிச்சை

    178 பேர் சிகிச்சை

    கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றில்இருந்து 198 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கேரளாவில் இதுவரை 378 பேருக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் அங்கு நேற்று 36 பேர் குணப்படுத்தப்பட்ட நிலையில் இன்று 19 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளார்கள். தற்போது வெறும்.178 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதாவது பாதிக்கு பாதி பேர் குணமாகி உள்ளனர்.

    காசர்கோட்டில் பாதிப்பு

    காசர்கோட்டில் பாதிப்பு

    கேரளாவிலேயே அதிகபடசமாக காசர்கோட்டில் 166 பேரும் கண்ணூரில் 75 பேரும் பாதிக்கப்பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு பெரும்பாலனோர் குணமாகி உள்ளனர். கேரளாவில் கொரோனா பாதித்தவர்களில் வெறும் ஒரு சதவீதம் பேர் மட்டும் இது வரை உயிரிழந்துள்ளனர். இன்று வெறும் 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    கொரோனா இருக்காது

    கொரோனா இருக்காது

    இதற்கு காரணம் கேரளாவின் சுகாதார உள்கட்டமைப்பு மற்ற மாநிலங்களைவிட வலுவாக உள்ளது. எனவெ கொரோனா வைரஸ் இல்லாத முதல் இந்திய மாநிலமாக கேரளா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதிக்குள் (ஏப்ரல் 18) கொரோனா இல்லாத நாளை கேரளா எட்டினால் முதன் முதலாக கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்ட மாநிலமாக மாறும் என்று கருதப்படுகிறது.

    சமூக விலகல்

    சமூக விலகல்

    உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்தபடி விரைவாக செயல்பட்டதால் இந்த நிலையை எட்ட முடிந்ததாக நேற்று ஒரு ட்வீட்டில் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் சுட்டிக்காட்டியிருந்தார். உலகின் உயர்மட்ட மருத்துவ வல்லுநர்களும் அரசாங்கங்களும் கொரோனா வைரஸ் தொற்றை முடிவு சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தின. அதை கேரளா சரியாக செய்ததுடன். விரைவாக அதிகம் பேருக்கு பரிசோனைகளை மேற்கொண்டது, பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து தனிமைப்படுத்தியது போன்றவற்றை சரியாக செய்தது. இதன் காரணமாக இன்றைக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு கொரோனாவை ஒழிப்பதில் முன்மாதிரியாக திகழ்கிறது.

    English summary
    Kerala will most probably become the first state in India to flatten the COVID-19 curve.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X