"டைம் வந்தாச்சு.. போக வேண்டியதுதான்".. முன்னாள் மிஸ் கேரள அழகியின் கடைசி பதிவு.. வைரலாகும் வீடியோ
கேரள முன்னாள் அழகியின் இன்ஸ்டாகிராம் கடைசி வீடியோ வைரலாகிறது
திருவனந்தபுரம்: சாலை விபத்தில் முன்னாள் கேரள அழகியும், அவரது தோழியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர்... இதே அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன்.
இவர்கள் 2 பேருமே நெருங்கிய தோழிகள்.. இதில் ஆன்சி திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஆன்சி... அஞ்சனா திருச்சூரை சேர்ந்தவர்..

கார்
இந்நிலையில், இன்று அதிகாலை தோழிகள் 2 பேர் உட்பட 4 பேர் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களின் முன்னாடி ஒரு பைக் சென்று கொண்டிருந்தது. அந்த பைக் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக, காரை சட்டென்று திருப்பியுள்ளனர். அப்போதுதான், கார் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.. தாறுமாறாக ரோட்டில் ஓடியது.. வேகமாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக அந்த கார் மோதியது...

பரிதாபம்
இதில் கார் அப்பளம்போல் அங்கேயே நொறுங்கி விட்டது.. காருக்குள் இருந்த அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் இருவருமே சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த காரில் மொத்தம் 4 பேர் இருந்திருக்கிறார்கள்.. 2 பேர் உயிரிழந்த நிலையில், மற்ற 2 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி உள்ளனர்.. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரபரப்பு
அங்கு தீவிரமான சிகிச்சை அவர்களுக்கு நடந்து வருகிறது... இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு ஆன்சி பதிவிட்ட ஒரு போஸ்ட் பெருத்த சோகத்தை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ''இது போவதற்கான நேரம்'' (It's time to go )" என்று சொல்லி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போஸ்ட் செய்தார் ஆன்சி..

சோகம்
அந்த வீடியோவில் ஒரு அடர்ந்த காட்டுக்குள் ஆன்சி நடந்து செல்வது போல இருக்கிறது.. இந்த போஸ்ட் தான் பலரையும் அதிர வைத்து வருகிறது.. "என்ன ஒரு வரிகள்? இறக்கப் போவது ஆன்சிக்கு முன்பே தெரிந்துவிட்டதோ?" என்றெல்லாம் அதற்கு கமெண்ட்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. உயிரிழந்த பெண்களுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications