போகிற போக்கில் எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் இழுத்துவிட்ட கமல்ஹாசன்! என்ன சொன்னாருனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ள கமல்ஹாசன், போகிற போக்கில் எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் இழுத்திருக்கிறார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த தக் லைஃப் (Thug Life ) திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய கமல், "நான் அன்பினால்தான் அப்படி சொன்னேன். பல வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழியின் வரலாற்றை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நான் எதையும் அர்த்தப்படுத்த விரும்பவில்லை. தமிழ்நாடு அடிப்படையில் தனி சிறப்பு கொண்டது. இங்கு ஒரு மேனன், ஒரு ரெட்டி, ஒரு கன்னட ஐயங்கார் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர்.

Kamal Haasan MGR Jayalalitha Kannada Tamil

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்சனை வந்தபோது, கர்நாடக மக்களும், அம்மாநில முதல்வரும் ஆதரவளித்தார்கள். 'இங்கே வாங்க நாங்க வீடு தருகிறோம். எங்கேயும் போகாதீங்க' என கூறியிருந்தார்கள். எனவே தக் லைஃப் படத்தையும், எனக்கு எதிரான மொழி பிரச்சனையையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மொழியைப்பற்றி பேச தகுதியில்லை, நான் உட்பட.

இந்த மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம்" என கூறியுள்ளார்.

இதன் மூலம் மேனன் என எம்ஜிஆரையும், கன்னட ஐயங்கார் என ஜெயலலிதாவையும் கமல்ஹாசன் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 2013ம் ஆண்டு கமலின் விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்நாட்டில் சிக்கலை எதிர்கொண்டது. இந்தப் படத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக சில மத அமைப்புகள் குற்றம்சாட்டின. இதனால், தமிழ்நாட்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு படத்தை வெளியிட தடை விதித்தது.

இந்த படத்தை கமல் தயாரித்திருந்தார் என்பதால், வெளியீடு நிறுத்தப்பட்டது கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தியது. அப்போது உணர்ச்சிவசப்பட்ட கமல், தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாகவும், இந்தியாவில் மதச்சார்பின்மை இல்லை என்றும் விமர்சித்திருந்தார்.

கர்நாடகாவிலும் கூட படத்திற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால் அம்மாநில திரைத்துறையினர் ஒன்றாக சேர்ந்து கமலுக்கு ஆதரவளித்தனர். அதேபோல, அம்மாநில முதல்வரும் ஆதரவளித்திருந்தார். இதைதான் இன்று அவர் நினைவு கூர்ந்திருக்கிறார். ஆனால், போகிற போக்கில் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சர் என ஜெயலலிதாவை இழுத்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+