திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்னஞ்சிறிய கரகுளம் கிராமத்தில் வட்டமடித்த விமானம்.. யாருனு பார்த்தா இளம் விமானியான நம்ம ஜெனி!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் 21 வயதில் விமானத்தை இயக்கிய இளம் பெண் விமானி ஜெனி ஜெரோமை பாராட்டி வருகிறார்கள்.

திருவனந்தபுரம் மாவட்டம் கரகுளம் கிராமத்தைச் சேர்ந்த பியாஸ்ட்ரா- ஜெரோம் தம்பதியின் மகள் ஜெனி ஜெரோம் (21). இவர் கேரளாவின் மிக குறைந்த வயது பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

இவர் நேற்று முன் தினம் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் அரேபியா (ஜி-9-449) விமானத்தில் இணை விமானியாக பணியாற்றி வந்தார்.

விமானம்

விமானம்


தற்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெற்றிகரமாக விமானத்தை தரை இறக்கி சாதனை படைத்தார். மேலும் விமானத்தில் தனது கிராமத்திற்கும் பறந்தார் ஜெனி. சாதனை பெண் ஜெனி ஜெரோமுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கரகுளம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

பெருமை

பெருமை

ஜெனி ஜெரோமை பாராட்டி முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கேரளாவில் வயது குறைந்த பெண் வணிக விமானி என்ற பெருமை பெற்ற ஜெனிக்கு எனது வாழ்த்துகள்.

பெருமை கொள்கிறது

பெருமை கொள்கிறது

அவருடைய பெருமையில் கேரளா பங்கு கொள்கிறது. பள்ளிப் பருவ கனவை நனவாக்கி சாதனை படைத்த அவருடைய வாழ்க்கை பெண்களுக்கும் சாதாரண மக்களுக்கும் ஊக்கமாக இருக்கும். ஆணும் பெண்ணும் சமம் என்ற சமுதாய நீதியை உணர்த்தும் விதமாக ஜெனி ஜெரோமின் ஆகாய பயண சாதனை உணர்த்தியுள்ளது.

பெற்றோர்

பெற்றோர்

ஜெனி ஜெரோமின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொடுத்த அவருடைய பெற்றோர் சமூகத்திற்கு ஓர் முன்னுதாரணம். பெண் குழந்தைகளுக்கு ஊக்க மருந்தாக செயலாற்ற இந்த சமூகம் முழுவதும் முன்வர வேண்டும். ஜெனி ஜெரோம் மென்மேலும் வாழ்வில் வானளவில் உயர வாழ்த்துகள் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

English summary
Kerala girl as pilot and take off aircraft to her hometown on her first journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X