கடவுளின் தேசத்துக்கு வந்த சோதனை! விடாமல் துரத்தும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்! கொத்தாய் கொல்ல முடிவு
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்த நிலையில், அந்த பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் பன்றிகளை கொல்ல கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன..
உலக மக்களை அச்சுறுத்தலில் ஆழ்த்தி தற்போது ஓரளவு குறைந்துள்ள கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் குரங்கு அம்மை, பன்றி காய்ச்சல் பாதிப்பு என அடுத்தடுத்து நோய்களால் மேற்கத்திய நாடுகள் பீதிக்குள்ளாகி இருக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் தமிழகத்தின் அருகில் உள்ள கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டுகளில் சற்று அதிகமாக இருந்தது.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்
மேலும் அங்கு குரங்கு அம்மை பாதிப்பும் உறுதி செய்யப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வயநாட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல கேரள மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. காரணம் வளர்ப்பு பன்றிளை பாதிக்கும் ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல் மிகவும் ஆபத்தான நோயாக பார்க்கப்படுகிறது.

திருச்சூரில் அச்சம்
ஜூன் ஜூலை மாதங்களில் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் கேரளாவுக்கும் பரவியது. இதனைத் தொடர்ந்து வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தபோதிலும் தற்போது திருச்சூர் பகுதியில் வளர்ப்பு பன்றிகளில் இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. திருச்சூர் எட்டு முனை பகுதியில் இருக்கும் பன்றி பண்ணையில் அடுத்தடுத்து கூட்டம் கூட்டமாக பன்றிகள் உயிரிழந்தன.

கண்காணிப்பு தீவிரம்
இதை அடுத்து பன்றிகளின் மாதிரி சேகரிக்கப்பட்டு மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அந்த பன்றிகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து திருச்சூரில் அந்த பண்ணையை சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பன்றி பண்ணைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அந்த பன்றி பண்ணையில் பணியாற்றிய தொழிலாளர்களின் ரத்த மாதிரிகளை சேகரிக்கவும் அவர்களது உடல் நிலையை கண்காணிக்கவும் அதிகாரிகள் சிறப்புக்குழுவை நியமித்துள்ளனர்.

பன்றிகளை கொல்ல முடிவு
மேலும் பன்றி பண்ணை இருந்த இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பன்றி இறைச்சிகள் விற்பனை செய்யவும் பன்றி தீவனங்களை வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு நோய் கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து பன்றிகளையும் கொல்ல சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications