Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் திடீர் மரணம்.. 20 பேருக்கு சிகிச்சை.. ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட அரசு மருத்துவமனை நர்ஸ் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் பரிதாபமாக இறந்தார். மேலும் 20 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நர்ஸ் இறப்புக்கான காரணம் பற்றிய விசாரணை தீவிரமாகி உள்ளது.

கேரளா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மட்டன், சிக்கன் வகை உணவுகளை சாப்பிடும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கூட சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட கேரளா காசர்கோடு பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு கல்லூரி மாணவி தேவநந்தா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. இந்த முறை மந்தி பிரியாணி சாப்பிட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் இறந்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ்

மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ்

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ராஷ்மி (வயது 33). இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ம் தேதி கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி வாங்கி ராஷ்மி சாப்பிட்டுள்ளார்.

 மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி


இதை சாப்பிட்ட பிறகு ராஷ்மிக்கு அன்றைய தினம் உடல் நலபாதிப்பு ஏற்பட்டது. வாந்தி, வயிற்றுபோக்கால் அவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஷ்மியின் உடல்நலன் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. இதனால் உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

உணவகத்துக்கு சீல்

உணவகத்துக்கு சீல்

இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி ராஷ்மி பரிதாபமாக இறந்துள்ளார். இதுபற்றி உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணையை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் ராஷ்மி சாப்பிட்ட உணவகத்தில் அன்றைய தினம் உணவு சாப்பிட்ட மேலும் 20 பேர் உடல் நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்தில் அதிரடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி லைசென்ஸை ரத்து செய்து உணவகத்துக்கு சீல் வைத்தனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதுபற்றி மாநில உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் (கோட்டயம்), ரன்தீப் கூறுகையில், ‛‛கடந்த டிசம்பர் 29ல் ராஷ்மி உணவகத்தில் சாப்பிட்டார். உணவகம் ஆய்வு செய்யப்பட்டு லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. உணவு விஷயமாக மாறி இருக்கலாம் என நினைக்கிறோம். மயோனைஸ் தான் உணவு விஷத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கருதுகிறோம். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது'' என்றார்.

தொடரும் விசாரணை

தொடரும் விசாரணை

இதற்கிடையே தான் ராஷ்மியின் இறப்புக்கு என்ன காரணம் என்பது பற்றிய விசாரணை தீவிரமாகி உள்ளது. ராஷ்மியின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பிறகு தான் ராஷ்மிகாவின் இறப்புக்கான காரணம் என்பது முழுமையாக தெரியவரும். இருப்பினும் கூட ராஷ்மியின் மரணத்துக்கு உணவே விஷயமாக மாறியது தான் முக்கிய காரணமாக இருக்கலாம் என உணவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

தொடரும் சோதனை

தொடரும் சோதனை

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோட்டயத்தில் உள்ள ஓட்டல்களில் உணவுத்துறை அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையை தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 429 உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தப்பட்டது. இதில் 43 ஓட்டல்களை மூட உத்தரவிட்ட நிலையில் 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 44 உணவகங்களில் இருந்து உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+