"அந்த ஒரு வீடியோ.. பறிபோன உயிர்!" பேருந்தில் பாலியல் புகார் எதிரொலி.. கேரளாவில் இளைஞர் தற்கொலை!
திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்து ஒன்றில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகச் சொல்லி உதய்தீபக் என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அந்தப் பெண் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. தன் மீதான குற்றச்சாட்டை உதய்தீபக் மறுத்திருந்த நிலையில், அவர் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பேருந்து பயணத்தின்போது ஆண் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாகச் சொல்லி, பெண் ஒருவர் வீடியோவை வெளியிட்டு இருந்தார். நெரிசலான பேருந்தில் தீபக்கின் முழங்கை அந்த பெண்ணின் உடலில் படுவது போல அந்த வீடியோவில் இருந்தது. ஷிம்ஜிதா என்ற பெண் பாலியல் தொல்லை எனச் சொல்லி இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

குற்றச்சாட்டு
கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக் ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஜனவரி 16 அன்று அவர் வேலைக்காக கண்ணூருக்கு கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்தில் சென்றபோது தான் ஷிம்ஜிதா இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் தீபக் முதலில் அவரிடமிருந்து சற்று தொலைவில் நிற்கிறார். பின்னர், பேருந்தில் இருந்து தீபக் இறங்கும்போது, அவரது முழங்கை தன் மீது உரசியதாக அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், மன உளைச்சலில் இருந்த தீபக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபக் வேண்டும் என்றே பெண்ணை உரசுவது போலத் தெரியவில்லை என்றும் தெரியாமலேயே அப்பெண் மீது கைப்பட்டது போலவே இருப்பதாகப் பலரும் பதிவிட்டு வந்தனர்..
விளக்கம்
தீபக் மரணத்தைத் தொடர்ந்து ஷிம்ஜிதா மீதான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார். இதை ஒரு தெரியாமல் நடந்த ஒரு சம்பவம் இல்லை.. மாறாக "பாலியல் அத்துமீறல்" என்று ஷிம்ஜிதா உறுதியாகக் கூறினார். தீபக் செயல் தற்செயலானது என்று பலர் கருத்து தெரிவித்ததற்குப் பதிலளித்த ஷிம்ஜிதா, தீபக் பேருந்தில் மற்றொரு பெண்ணை சங்கடப்படுத்தினார் என்றும் அதைக் கண்ட பிறகே அதை வீடியோ எடுக்கத் தொடங்கியதாகவும் ஷிம்ஜிதா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைந்தபோது, நான் வீடியோ எடுத்தேன். அப்போது அவர் வேண்டுமென்றே என் மீதும் உரசினார்" என்றார். தனது குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று கூறிய ஷிம்ஜிதா, அவர் தற்கொலை செய்துகொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
உயிரிழப்பு
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தீபக் தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக தீபக்கின் உறவினர்களும் நண்பர்களும் குற்றம் சாட்டினர். அவரது நண்பர் ஒருவர் கூறுகையில், "அந்த வீடியோ அவரை மிகவும் பாதித்தது. இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுபவர்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.. யாருடைய வாழ்க்கையுடனும் விளையாடாதீர்கள். உண்மை தெரியாமல் இதுபோன்ற விஷயங்களைப் பகிரவோ, வெளியிடவோ வேண்டாம்" என்றார்.
கொந்தளிப்பு
தீபக்கின் மரணம் இணையத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஷிம்ஜிதா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆண்கள் உரிமை ஆர்வலரான ராகுல் ஈஸ்வர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும், "தீபக்கின் ஒட்டுமொத்தக் குடும்பமும் அவரை நம்பியை இருந்தது. இப்போது அவர்கள் என்ன செய்வார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளில் இருந்து ஆண்களைப் பாதுகாக்க ஆண்கள் உரிமை ஆணையத்தை அமைக்க வேண்டும்" என்றார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!










Click it and Unblock the Notifications