திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சைலஜாவிற்கு நோ சொல்லிவிட்டு.. பினராயிக்கு மீண்டும் வாய்ப்பு.. மருமகனுக்கும் அமைச்சர் பதவி.. சர்ச்சை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி எல்டிஎப் கூட்டணி அரசு மே 20ம் தேதி மீண்டும் பதவி ஏற்க உள்ளது. இந்த நிலையில் சிபிஎம் வெளியிட்டு இருக்கும் அமைச்சரவை பட்டியல் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.

கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜாவிற்கு முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான எல்டிஎப் அரசில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பி.ஏ.முஹம்மது ரியாஸ், வி.சிவான்குட்டி, வீணா ஜார்ஜ், கே.என்.பாலாகோபால், வி.என்.வாசவன், சாஜி செரியன், பி ராஜீவ், எம்.பி.ராஜேஷ், கே ராதாகிருஷ்ணன், பி நந்தகுமார், மற்றும் எம்.வி.கோவிந்தன் போன்ற இளம் சிபிஎம் தலைவர்களுக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

18நாட்கள் கழித்து.. கேரள முதல்வராக மே 20இல் பதவியேற்கும் பினராயி விஜயன்..500 பேருக்கு மட்டுமே அனுமதி18நாட்கள் கழித்து.. கேரள முதல்வராக மே 20இல் பதவியேற்கும் பினராயி விஜயன்..500 பேருக்கு மட்டுமே அனுமதி

பெண்

பெண்

கட்சியில் கே.கே சைலஜா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. முக்கியமாக சைலஜா கேரளாவின் வருங்கால முதல்வராக வேண்டும், கேரளாவின் முதல் பெண் முதல்வராக வேண்டும் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தது. இந்த நிலையில் அவர் கட்சி விதியை காரணம் காட்டி நீக்கப்பட்டுள்ளார்.

விதி என்ன

விதி என்ன

இதற்கு சிபிஎம் கட்சி சொல்லும் விதி மிக எளிதானது.. கடந்த ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த யாருக்கும் இந்த முறை இடம் கிடையாது. சிம்பிள். இதனால்தான் சைலஜா போன்ற சிறப்பான அமைச்சர்களுக்கு கூட இடம் கொடுக்கவில்லை. ஆனால் இங்குதான் முதல்வர் பினராயி விஜயனை மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

ஒருவருக்கு பதவி வாய்ப்பு கொடுத்துவிட்டால் மீண்டும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதுதான் விதி என்றால்.. பினராயிக்கு மட்டும் ஏன் மீண்டும் முதல்வர் பதவி. அவருக்கு மட்டுமே இரண்டாவது வாய்ப்பு தருவது ஏன்? கட்சி விதி எங்கே போனது என்று கட்சிக்கு உள்ளேயும், கட்சியின் சில தொண்டர்களும், கேரள மக்களும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

சர்ச்சை

சர்ச்சை

இதில் இன்னொரு சர்ச்சசையான விஷயம், பினராயி விஜயனின் மருமகன் பிஏ முகமது ரியாஸுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விஜயராகவனின் மனைவி ஆர் பிந்துவிற்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பி ஏ முகமது ரியாஸ் மாணவ பருவத்தில் இருந்தே எஸ்எப்ஐ, டிஒய்பிஐ என்று கம்யூனிச அமைப்புகளில் தலைவராக இருந்தார்.

எப்படி வந்தது?

எப்படி வந்தது?

கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து எம்எல்ஏ ஆகி இருந்தாலும், முதல்முறை எம்எல்ஏ ஆனவுடன் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பினராயி மருமகன் என்பதால் இந்த சலுகையா என்று கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. கட்சிக்கு உள்ளேயே இதை சிலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

சிபிஎம்

சிபிஎம்

அதோடு சைலஜாவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் அதிகம் இருந்ததால் அவரை பினராயி ஒதுக்கிவிட்டார் என்றும் புகார் வைக்கப்படுகிறது. சிபிஎம் மூத்த எம்பி பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்கள் கூட சைலஜாவின் நீக்கத்திற்கு எதிராக பேச தொடங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இதில் தொடர்ந்து சைலஜா எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பதும் சந்தேகங்களை அதிகமாக்கி உள்ளது.

English summary
Kerala: No chance for Health Minister K K Shailja, But Pinarayi Vijayan gets second term as CM the state, his Son in Law also gets ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X