Kerala Onam Bumper: கேரள ஓணம் பம்பர் லாட்டரி.. இதுவரை நடக்காத அதியசம்! விற்பனையாளர்கள் சொல்றதை பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது ஓணம் பம்பர் லாட்டரி (Kerala Onam Bumper Lottery) சீட்டு விற்பனை நடந்து வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என்று இருக்கும் நிலையில் இதற்கான முதல் பரிசு ரூ.25 கோடி ஆகும். இதனால் நமக்கு அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற எண்ணத்தில் பலரும் டிக்கெட்டுகள் வாங்கி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு டிக்கெட்கள் விற்பனை சூடு பறக்க நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 47 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிக்கு அனுமதி உள்ளது. அங்கு தினம் தோறும் ரூ.1 கோடிக்கான லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. அதுபோல வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது.

ஓணம் பம்பர் லாட்டரி
நியூ இயர் கிறிஸ்துமஸ் பம்பர், சம்மர் பம்பர், விஷூ பம்பர், மான்சூன் பம்பர், திருவோணம் பம்பர், பூஜா பம்பர் என வருடத்திற்கு 6 பம்பர் டிக்கெட்டுகளின் குலுக்கல் நடைபெறுகின்றன. இந்த டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக பல கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக தற்போது விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்று வரும் ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும்.
"கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்" என்பார்களே... அதேபோல நமக்கும் ஒரு அதிர்ஷ்டம் அடித்து வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டு விடாதா? என்ற ஆசையில் கேரள லாட்டரிகளை ஆர்வத்துடன் லாட்டரி பிரியர்கள் வாங்கி வருகிறார்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனை
ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை பொறுத்தவரை கடந்த ஜூலை மாத இறுதியில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. வரும் 27 ஆம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது. இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில், டிக்கெட் விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி 47 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் விற்பனையை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் டிக்கெட் விற்பனை நடைபெற்று இருப்பதாக கேரள லாட்டரி துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு மொத்தம் 71,43,008 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. கடைசி இரண்டு வாரங்களில்தான் பாதிக்கும் மேலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
90 லட்சம் டிக்கெட்டுகள்
ஆனால் இந்த ஆண்டு தற்போதே டிக்கெட் விற்பனை எண்ணிக்கை அந்த எண்ணிக்கையை சர்வ சாதாரணமாக தாண்டிவிட்டது. இதனால், கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் டிக்கெட் விற்பனை அதிக அளவில் இருக்கும் என்று லாட்டரி விற்பனையாளர்கள் கூறினர். இந்த ஆண்டில் அச்சடிக்கப்பட்ட 90 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு மொத்தம் 80 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், 8.5 லட்சம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படாமல் இருந்தன. அதற்கு முந்தைய ஆண்டு, அதாவது 2023-ல் 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு, 75 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
லாட்டரிகளுக்கு 40 சதவீத வரி
மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22 ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது. ஜிஎஸ்டியில் லாட்டரிகளுக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 28 சதவீதம் வரி உள்ள நிலையில், இனி 40 சதவீத வரி வரம்புக்குள் லாட்டரிகள் செல்கின்றன. இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
லாட்டரி டிக்கெட் விலை உயருமா?
ஜிஎஸ்டி வரி உயர்வால் டிக்கெட் விலை உயருமோ என்ற அச்சம் லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விலை உயர்த்தப்படாது என்று கேரள நிதி அமைச்சர் கே. என். பாலகோபால் உறுதியளித்துள்ளார். எனினும், ஏஜென்ட் கமிஷன் தொகை குறைக்கப்பட்டு இந்த இழப்பு ஈடுசெய்யப்படும் என்று கூறப்படுகிறது.
திருவோணம் பம்பர் குலுக்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில், இந்த ஆண்டு அதிர்ஷ்டம் நமக்கு அடித்துவிடாதா என்ற ஆர்வத்தில் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்களாம்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications