கடன் சுமை..வெளிநாடு செல்ல திட்டமிட்ட ஆட்டோ டிரைவருக்கு அடித்த 25 கோடி ஜாக்பாட்..இதுதான் ராஜயோகமா?
திருவனந்தபுரம்: அதிர்ஷ்டம் வர வேண்டும் என்று நினைத்தால் ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் வரும். கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார். அப்படித்தான் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ஓணம் பண்டிகை லாட்டரியில் ஜாக்பாட் அடித்துள்ளது. கடன் சுமையால் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்த அவருக்கு அதிர்ஷ்ட தேவதையின் ஆசி கிடைத்துள்ளது. அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல ரூ.25 கோடி கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ஆட்டோ ஓட்டுநர் அனூப். இவருக்கு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஆசை. கொஞ்சம் கடன் சுமையும் இருந்தது. வீடு கட்ட வேண்டும் என்று வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
அதே போல கடன் சுமையை தீர்க்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று சமையல் வேலை செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்து அதற்காகவும் முயற்சி செய்து வந்தார்.

ஆட்டோ டிரைவருக்கு அதிர்ஷ்டம்
கேரளா மாநில அரசின் லாட்டரிகளை அவ்வப்போது வாங்கி வருவார் அனூப். அதற்கு சிறிது சிறிதாக பரிசும் விழுந்து வந்தது. ஓணம் பண்டிகைக்கான சிறப்பு பம்பர் குலுக்கல் லாட்டரியை சனிக்கிழமையன்று வாங்கினார். முதலில் ஒரு டிக்கெட்டை வாங்கியவர் என்ன நினைத்தாரோ TJ-750605 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டினை வாங்கினார்.

ஓணம் சிறப்பு குலுக்கல்
லாட்டரி பரிசுத்தொகை ரூ. 25 கோடியாகும். இந்த லாட்டரியின் வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் விழா திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்தார். அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர் அனூப்பின் டிக்கெட் எண்ணான TJ-750605 வெற்றி பெற்ற எண்ணாக அறிவிக்கப்பட்டது.

யார் அந்த அதிர்ஷ்டசாலி
வெற்றி பெற்ற எண் அறிவிக்கப்பட்ட உடன் அந்த டிக்கெட்டிற்கு சொந்தமான ஆள் யார் என அனைவரும் தேட ஆரம்பித்தனர். இறுதியில், அந்த லாட்டரிச்சீட்டு திருவனந்தபுரம் பழவங்காடி என்ற இடத்தில் உள்ள ஒரு ஏஜன்சியில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது. அந்த அதிர்ஷ்டசாலி ஆட்டோ டிரைவர் அனூப் தான் என்று தெரியவந்தது.

ஆட்டோ டிரைவருக்கு ஜாக்பாட்
இதனையடுத்து செய்தியாளர்கள் அனைவரும் அனூப்பின் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். தான்தான் அந்த அதிஷ்டசாலி என்று கடைசிவரை அனுப்பினால் நம்ப முடியவில்லை. அப்புறம் எஸ்எம்எஸ் பார்த்து உறுதி செய்து கொண்டார். லாட்டரி விற்பனை செய்த ஏஜென்டிடம் கேட்டும் அதை உறுதி படுத்திய பிறகே தனது பரிசு கிடைத்ததை நம்பினார் அனூப்.

வீடு கட்ட வேண்டும்
தனக்கு கிடைத்த லாட்டரி பரிசு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அனூப், வீடு கட்ட கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தேன் இனி அது எனக்கு தேவைப்படாது என்றார். கடன் சுமையை தீர்க்க வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். இது செல்ல வேண்டிய அவசியமிருக்காது. கிடைத்த பணத்தில் இருந்து ஒரு வீடு கட்ட வேண்டும். இங்கேயே ஒரு ஹோட்டல் தொடங்கலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் அனூப்.

ராஜயோகம்
ஜோதிடத்தில் குரு பகவான் பார்வை கிடைத்தால் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும் என்று கூறுவார்கள். அதே போல கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றால் சிலருக்கு விபரீத ராஜயோகம் கிடைத்து ஜாக்பாட் அடிக்கும் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர் அனூப்பிற்கு கிடைத்துள்ள திடீர் ராஜயோகம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 25 கோடி பரிசுப்பணத்தில் வரிகள் கட்டியது போக அவருக்கு ரூ. 15 கோடி கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

நம்ப முடியவில்லை
இன்னமும் தனக்கு பரிசு கிடைத்துள்ளது என்று நம்ப முடியாத டென்சனிலேயே இருக்கிறார் அனூப். தனக்கு கிடைத்த பரிசு பணத்தில் இருந்து கடன்களை அடைத்து விட்டு உறவினர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதான் கொடுக்கிறது தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது. அனூப்பிற்கு லாட்டரி வடிவத்தில் ஜாக்பாட் அடித்துள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications