சந்திரமுகி பாம்பு மாதிரி.. கோவிலை காத்த ராட்சச முதலை! இப்போது.. கதறி அழும் கேரள மக்கள்! என்ன நடந்தது
திருவனந்தபுரம்: கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் சுத்த சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த கோவில் முதலை உயிரிழந்தது அந்த கோவில் பக்தர்கள் மத்தியில் பெருத்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரா என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற அனந்தபத்மநாப சுவாமி கோயில் ஒன்று உள்ளது.
ஏரியின் நடுவின் இந்தக்கோவில் அமைந்துள்ளது. கேரளாவில் ஏரியில் அமைந்து இருக்கும் ஒரே கோவில் இதுதான்.

கோவில் முதலை
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் மூலஸ்தானம் இதுதான் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கோவிலின் மையப் பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்திற்குள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று வசித்து வந்தது. பாபியா என்ற பெயிரிடப்பட்ட இந்த முதலை சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

பிரசாதம் மட்டுமே சாப்பிடும்
மாமிச உண்ணியான முதலை வெறும் அரிசி சாதம் மட்டுமே சாப்பிடும் என்பது வியப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கடவுளின் தூதுவராக உள்ள இந்த பாபியா முதலைதான் கோவிலை பாதுகாத்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கையும் தெரிவித்து வந்தனர். கோவில் குளத்தில் உள்ள மீன்களை கூட ஒருபோதும் இந்த முதலை சாப்பிட்டது இல்லை. சுத்த சைவ முதலையான இது அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அளிக்கும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வந்ததாக கூறப்பட்டது.

பெரும் அதிர்ச்சி
கோவில் வளாகத்தில் முதலை ஊர்ந்து வரும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. இந்த கோவில் குளத்திற்குள் முதலை வந்தது எப்படி? இதற்கு பெயர் வைத்தது யார் என யாருக்கும் தெரியவில்லை. தெய்வீக முதலையாக அறியப்பட்ட இந்த பாபியா தற்போது உயிரிழந்துவிட்டது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்துள்ளது.

எப்படி சைவ முதலையாக மாறியது
இந்தியாவில் பரவலாக காணப்படும் வகையை சேர்ந்த இந்த முதலை(mugger crocodile) வனப்பகுதிகளில் மீன்கள், பாலூட்டி வகைகளான மான்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடக்கூடியது என்று வனவிலங்கு நிபுணர்கள் சொல்கின்றனர். எனினும் பாபியா முதலையை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கோயில் பிரசாதத்தையே உண்டு வாழ்ந்து இருப்பதால் அதுவே பழக்கமாகி முதலை சைவமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications