மயக்கமருந்து கொடுத்து “நிர்வாண வீடியோ”வசமாய் சிக்கிய பிரபல நடிகர்! அடுத்தடுத்த சர்ச்சையால் அதிர்ச்சி
திருவனந்தபுரம் : பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு பெண் நடிகை ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நடிகை குறித்த அடையாளங்களை ஃபேஸ்புக் லைவ் வெளிப்படுத்தியதாக மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை ஒருவரை காரில் கடத்திய கும்பல் ஒன்று அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் இதே போன்ற ஒரு சிக்கலில் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அதிர்ச்சி
இந்நிலையில் மலையாள நடிகை ஒருவரை நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஒருவர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகார் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 1983 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூர்யன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் பாபு என்பவர் தான் இந்த புகாரில் சிக்கியுள்ளவர். அடுத்ததாக பிலிப்ஸ் அண்ட் த மங்கி பென், பெருச்சாழி, ஆடு , முத்துகவு, ஆடு 2, பிலிப்ஸ் அண்ட் த மங்கி பென்மற்றும் ஹோம் ஆகிய படங்களைத் தயாரித்து நடித்து மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தார்,

நடிகர் விஜய் பாபு
மேலும் ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி பல வெற்றி படங்களை தயாரித்து மலையாள மக்களிடையே தனி இடத்தை பிடித்த விஜய் பாபு தற்போது நடிகர் திலீப்புக்கு பிறகு பாலியல் புகார் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விஜய் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் நடிகரும் தயாரிப்பாளுருமான விஜய் பாபுவால் ஒன்றரை மாதங்களாக தான் அனுபவித்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து முகநூல் பதிவின் மூலம் கூறியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை
தனக்கு நல்லது செய்வது செய்வது போல் நடந்து கொண்ட விஜய் பாபு பின்னர் தன்னை பாலியல் ரீதியாக சுரண்டினார் என்றும் கடந்த ஒன்றரை மாதங்களில் போதையில் பலமுறை பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். கற்பழிப்பு மற்றும் உடல் ரீதியான தாக்குதல் தவிர அவர் மது மற்றும் போதைப்பொருளை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என்றும் அந்த நடிகை கடுமையாக குற்றம் சாட்டினார்.

நடிகர் மறுப்பு
மலையாள திரையுலகில் தனது செல்வாக்கு காரணமாக இது குறித்து தான் வெளியே சொல்லவில்லை, விஜய் பாபுவின் வலையில் மேலும் பல பெண்களும் சிக்கியுள்ளனர் என்பது தனக்குத் தெரிந்தது, அவர் என்னுடைய நிர்வாண வீடியோவைப் பதிவுசெய்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்று அந்த பெண் குற்றம் சாட்டினார். இந்நிலையில், செவ்வாயன்று பேஸ்புக் நேரலையில் பேசிய விஜய் பாபு தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்,. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த நடிகையை தனக்குத் தெரியும் என்று அவர் ஒப்புக்கொண்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அந்த நடிகை மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தயாரிப்பாளர் கூறினார்.

மேலும் ஒரு வழக்கு
ஃபேஸ்புக் லைவ்வின் போது நடிகையின் பெயரை அவர் பலமுறை குறிப்பிட்டார். அவர் "பாதிக்கப்பட்டவர்" அல்ல என்றும், இந்த வழக்கில் "உண்மையான பாதிக்கப்பட்டவர்" தான் தான் என்றும் விஜய் பாபு கூறினார். இதனிடையே பாதிக்கப்பட்ட நடிகையின் அடையாளத்தை வெளியிட்டதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications