Vijay: "ஜனநாயகன்" கடைசி படம் இல்லையா? மீண்டும் விஜய் நடிப்பாரா? கொளுத்தி போட்ட மமிதா பைஜு!
திருவனந்தபுரம்: "ஜனநாயகன்"தான் கடைசி படமா என விஜய்யிடம் கேட்டதற்கு அவர் என்ன சொன்னார் என்பது குறித்து நடிகை மமிதா பைஜு விளக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது.
விஜய் பிறந்தநாளையொட்டி "ஜனநாயகன்" கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜு, விஜய்யுடன் இணைந்து முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பேசிய போது அவர் பகிர்ந்த ஒரு முக்கிய தகவலை மமிதா பைஜு தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
கேரளா நிகழ்ச்சி
கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மமிதாவிடம், விஜய்யின் கடைசி படத்தில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த "ஜனநாயகன் படப்பிடிப்பில் இதுதான் உங்களுடைய கடைசி படமா? என விஜய் சாரிடம் கேட்டேன்.
தேர்தல் முடிவுகள்
அதற்கு அவர் தெரியவில்லை. தேர்தல் முடிந்ததும் முடிவுகள் வந்த பிறகு பார்க்கலாம் என கூறினார். விஜய் சொன்ன பதிலை மமிதா சொன்னதை அடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மமிதா பேச்சு
மேலும் மமிதா பேசுகையில், ஜனநாயகன் படப்பிடிப்பில் எல்லாருமே எமோஷனலாக இருந்தோம். விஜய் சாரும் அப்படித்தான் இருந்தார் என தெரிவித்தார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு ஆகிறது.
முழு நேர அரசியல்
இந்த கட்சி தொடங்குவதற்கு முன்பே ஜனநாயகன் என்ற படத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டார். இதனால் இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு பிறகு முழு நேர அரசியலில் நான் ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார். முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என விஜய் சொன்னது அவரது கட்சியினருக்கு மகிழ்ச்சியை தந்தது.
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தவெக கல்வி விருது வழங்கும் விழாவில், ஒரு மாணவி, விஜய்யிடம், நீங்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு படமோ இரு படங்களோ கண்டிப்பாக செய்ய வேண்டும் அண்ணா என கேட்டார். அதற்கு விஜய்யும் பார்க்கலாம் என்றார்.
எச்.வினோத் யார்
அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச்.வினோத்தான், ஜனநாயகன் எனும் படத்தை விஜய்யை வைத்து இயக்கியுள்ளார். முதல் முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலின் போது வெளியாகிறது.
போலீஸ் அதிகாரி
இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று முன் தினம் இரவு 12 மணிக்கு விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியானது. இதில் போலீஸ் அதிகாரி லுக்கில் விஜய் இருந்தார். அவரின் தோற்றத்தை ரசிகர்கள் கண்டு ஆரவாரம் செய்தனர்.
பார்வையாளர்கள்
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய், ஒரு முக்கியமான அரசியலை பேச போகிறார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இது கடைசி படமா என கேட்டதற்கு விஜய் சொன்ன பதிலை மமிதா சொன்னது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications