விடாமல் குடும்ப சண்டை.. 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை..கேரளாவில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரத்தில் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது, கணவனே வேறு பிரச்னை காரணமாக கொலை செய்துவிட்டாரா? எனும் கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்கொலை

தற்கொலை

கேரளாவின் மலப்புரம் பகுதியில் வசித்து வருபவர் சஃப்வா. 26 வயதான இவருக்கு இரண்டு வயதிலும், ஒரு வயதிலும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ரஷீத் அலி வெளியூரில் வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் ரஷீத் இன்று காலை எழுந்து பார்த்துள்ளார். அப்போது அவரது மனைவி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். அவரது இரண்டு குழந்தைகளும் சடலமாக இருந்துள்ளனர்.

விசாரணை

விசாரணை

பதறியடித்து சென்று மனைவியை மீட்டுள்ளார். ஆனால் மனைவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, "தகவலறிந்து நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

வாட்ஸ்அப் மெசேஜ்

வாட்ஸ்அப் மெசேஜ்

சம்பவத்திற்கு முன்னர் விடியற்காலை 3 மணியளவில் தான் தற்கொலை செய்துகொள்வதாக பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்த தனது கணவனுக்கு மனைவி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியிருந்திருக்கிறார். ஆனால் ரஷீத் உறங்கிக்கொண்டிருந்ததால் இதனை கவனிக்கவில்லை. பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோதுதான் அவருக்கு சம்பவம் தெரிந்திருக்கிறது. குடும்ப பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை


மட்டுமல்லாது, வீட்டில் எல்லோரும் ஒரே அறையில்தான் உறங்குவார்கள். ஆனால் சம்பவத்தன்று ரஷீத் மட்டும் வேறு ஒரு அறையில் உறங்கியிருக்கிறார். இது கொலையா? தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் சம்பவம் குறித்து உறுதியாக எதையும் சொல்ல முடியும்." என்று கூறியுள்ளனர். குடும்ப தகராறு காரணமாக 26 வயதான மனைவி தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+