Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதக மேட்டரே பொய்.. போலீசில் புயலை கிளப்பிய "பாய்சன்" காதலி கிரீஷ்மா.. நிஜமா நடந்ததே வேறயாமே!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் கொலை செய்யப்பட்ட ஷாரோன் என்ற நபரின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் சில வாக்குமூலங்கள் வெளியாகி உள்ளன.

கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். 23 வயதே ஆன இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். வேறு கல்லூரியில் படித்து வந்த கிரீஷ்மா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் ஒன்றாக பயணம் செய்கையில் இவர்கள் காதலில் விழுந்து உள்ளனர்.

இந்த கிரீஷ்மாதான் தனது காதலன் ஷாரோனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். இவர்கள் இருவரும் கல்லூரியில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

கிரீஷ்மா

கிரீஷ்மா

இந்த நிலையில் கிரீஷ்மா இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். முன்னதாக இந்த வழக்கு விசாரணை தொடங்கிய போது அதில் கிரீஷ்மா ஜாதகத்தை நம்பி கொலை செய்ததாக செய்தி வெளியானது. அதாவது, கிரீஷ்மா வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். பெரிய பணக்கார குடும்பம் ஒன்றில் இருந்து வரன் வந்திருக்கிறது. இதையடுத்து கிரீஷிமா காதலனை விட்டுவிட்டு அந்த நபரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். பணக்கார மாப்பிள்ளை என்றதும் காதலை விட ஒப்புக்கொண்டு உள்ளார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

ஆனால் அப்போது அந்த பெண்ணுக்கு ஜாதகம் பார்த்த போது முதல் கணவர் எப்படியும் இறந்துவிடுவார் என்று எச்சரித்து உள்ளனர். இதனால் பணக்கார கணவர் இறந்து போனால் எதிர்காலம் நாசமாகிவிடும் என்று அந்த பெண், தனது காதலனையே முதலில் திருமணம் செய்துள்ளார். தனது காதலன் இறந்தால் பிரச்சனை இல்லை என்பதால் திருமணம் செய்தார். ஆனால் அவர் சாகவில்லை என்றதும் கொலை செய்துவிட்டார் என்று முதலில் செய்திகள் வெளியாகின.

ஜாதகம்

ஜாதகம்

ஆனால் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் அதை கிரீஷ்மா மறுத்துள்ளார். அதன்படி, எனக்கு ஜாதகத்தில் அப்படி கண்டம் எதுவும் இல்லை. முதல் கணவர் இறந்துவிடுவார் என்றெல்லாம் இல்லை. நான் ஷாரோனிடம், எனக்கு திருமணம் ஆக போகிறது. நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் ஷாரோன் கேட்கவில்லை. நான் பல முறை சொல்லியும் எனக்கு திருமணம் ஆக போவதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஷாரோன்

ஷாரோன்

அவனை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக எனக்கு ஜாதகத்தில் கண்டம் இருக்கிறது என்றேன். முதல் கணவன் இறந்துவிடுவான். அதனால் பணக்கார மாப்பிள்ளையை முதலில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். அதன்பின் அவன் இறந்ததும் உன்னை திருமணம் செய்கிறேன் என்று பொய் சொன்னேன். ஜாதகத்தில் எல்லாம் அப்படி இல்லை. அவனிடம் பொய்தான் சொன்னேன்.

கண்டம்

கண்டம்

ஆனால் அவன் இதை கேட்கவில்லை. அன்றே என்னை பைக்கில் அழைத்து சென்று சர்ச்சில் வைத்து திருமணம் செய்து கொண்டான். அதுதான் நடந்தது. ஜாதகத்தில் எனக்கு கண்டம் என்று எதுவும் இல்லை அவனை பயமுறுத்த சொன்னேன். ஆனால் அதையே அவன் சவாலாக எடுத்துக்கொண்டு என்னை திருமணம் செய்து கொண்டான். கடைசியில் வேறு வழியில்லாமல், அவனை கொலை செய்ய வேண்டியதாகிவிட்டது, என்று கிரீஷ்மா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+